இந்த மான்

Indha Maan Lyrics in Tamil
Movie: Karakattakkaran(கரகாட்டக்காரன்)
Music: Ilaiyaraaja
Singers: Ilaiyaraaja and K. S. Chithra
Lyricist: Gangai Amaran(கங்கை அமரன்)

Indha Maan Lyrics in Tamil

பெண்: இந்த மான்
உந்தன் சொந்த மான்
பக்கம் வந்துதான்
சிந்து பாடும்

பெண்: இந்த மான்
உந்தன் சொந்த மான்
பக்கம் வந்துதான்
சிந்து பாடும்

பெண்: சிந்தைக்குள் ஆடும் ஜீவனே
கண்மணியே
சந்திக்க வேண்டும் தேவியே
என்னுயிரே

பெண்: இந்த மான்
உந்தன் சொந்த மான்
பக்கம் வந்ததான்

ஆண்: வேல் விழி போடும் தூண்டிலே
நான் விழலானேன் தோளிலே
பெண்: நூலிடை தேயும் நோயிலே
நான் வரம் கேட்கும் கோயிலே

ஆண்: அன்னமே ஆஆஆ ஆஆ
அன்னமே எந்தன் சொர்ணமே
உந்தன் எண்ணமே வானவில் வண்ணமே
கன்னமே மது கிண்ணமே
அதில் பொன்மணி வைரங்கள் மின்னுமே

பெண்: எண்ணமே தொல்லை பண்ணுமே
பெண் என்னும் கங்கைக்குள் பேரின்பமே

பெண்: இந்த மான்
உந்தன் சொந்த மான்
ஆண்: பக்கம் வந்துதான்
சிந்து பாடும்

பெண்: சிந்தைக்குள் ஆடும் ஜீவனே
ஆண்: கண்மணியே
பெண்: சந்திக்க வேண்டும் தேவனே
ஆண்: என்னுயிரே

பெண்: பொன்மணி மேகலை ஆடுதே
உன் விழிதான் இடம் தேடுதே
ஆண்: பெண் உடல் பார்த்ததும் நாணுதே
இன்பத்தில் வேதனை ஆனதே

பெண்: என்னத்தான் ஆஆஆ ஆஆ
என்னத்தான் உன்னை எண்ணிதான்
உடல் மின்னத்தான் வேதனை பின்னத்தான்
சொல்லித்தான் நெஞ்சை கிள்ளித்தான்
என்னை சொர்கத்தில் தேவனும் சோதித்தான்

ஆண்: மோகம்தான் சிந்தும் தேகம்தான்
தாகத்தில் நான் நிற்க ஆனந்தம்தான்

ஆண்: இந்த மான்
பெண்: உந்தன் சொந்த மான்
ஆண்: பக்கம் வந்துதான்
பெண்: சிந்து பாடும்

பெண்: இந்த மான்
ஆண்: எந்தன் சொந்த மான்
பெண்: பக்கம் வந்துதான்
ஆண்: சிந்து பாடும்

பெண்: சிந்தைக்குள் ஆடும் ஜீவனே
ஆண்: கண்மணியே
சந்திக்க வேண்டும் தேவியே
பெண்: என்னவனே

Youtube video

Other Songs From Karakattakkaran Album

Lyrics Added by Padalvarigal Team