கிளியே கிளியே

Kiliye Kiliye Lyrics in Tamil
Movie: Unakkum Enakkum(உனக்கும் எனக்கும்)
Music: Devi Sri Prasad
Singer: Jassie Gift
Lyricist: Na. Muthukumar(நா. முத்துக்குமார்)

Kiliye Kiliye Lyrics in Tamil

ஆண்: தம்பி போற ஊருக்கு வழி சொல்லு
குழு: தம்பி போற ஊருக்கு வழி சொல்லு
ஆண்: கருப்பா நீ கொஞ்சம் வழி சொல்லு
குழு: பொறுப்பா நீ கொஞ்சம் வழி சொல்லு

பெண்: என் குழந்தை கூட வழி சொல்லும்
குழு: அந்த பறவை கூட வழி சொல்லும்
பெண்: உன் எடக்கு பாட்ட நிப்பாட்டு
குழு: அப்ப தம்பிக்கு நீயே வழி காட்டு

குழு: அட எங்க ஊரு அந்த பக்கம்
வேலையெல்லாம் முடிஞ்சதும்
வண்டி கட்டி கூட்டி போறேன் டேய்

ஆண்: கிளியே கிளியே கீ கீ கிளியே
கிளியே கிளியே கீ கீ கிளியே
குயிலே குயிலே கூ கூ குயிலே

ஆண்: அட கிளிதான் கிளிதான் நான் கூட
என் மனச கூண்டுல அடச்சாலே
அட குயில்தான் குயில்தான் நான் கூட
என்ன இதயக் கூட்டுல வச்சாளே

ஆண்: காதல் நெனப்புல
நானும் கூடத்தான்
காத்தில் பறக்குறேன்

ஆண்: கிளியே கிளியே
கீ கீ கிளியே
குயிலே குயிலே
கூ கூ குயிலே

ஆண்: அவள பாத்த போது
என் பாதி உசுர பாத்தேன்
உயிரும் உயிரும் பேசும் பாஷையே
மூச்சுகுள்ளே கேட்டேன்

ஆண்: அவ எதிர வந்து நின்னா
என் மீதி உசுரத் தருவேன்
பார்வ படுகிற தூரம் போதுமே
பக்தன் போல கெடப்பேன்

ஆண்: அவ சிரிச்சா வெளிச்சம் உருவாகும்
அவ இமைச்சா உலகம் இருட்டாகும்
அவ பாத்தா போதும் பசி போகும்
அவ இருக்கும் திசையே அழகாகும்

ஆண்: ரெண்டு நொடிக்கு மேல்
நடுவில் கூட நான்
அவள நெனைக்கிறேனே

ஆண்: கிளியே கிளியே
கீ கீ கிளியே
குயிலே குயிலே
கூ கூ குயிலே

ஆண்: சில பொண்ணு சிரிப்பு அழகு
சில பொண்ணு பேச்சு அழகு
திமிரு கூட ஒரு அழகு என்று
நான் அவள பார்த்து அறிஞ்சேன்

ஆண்: சில பொண்ணு பாக்க அழகு
சில பொண்ணு பழக அழகு
ரெண்டு அழகுமே ஒன்னு சேர்ந்ததா
அவள நானும் பாத்தேன்

ஆண்: அவ கொடைய மறந்து வரும் போது
நான் மழைய ரசிக்க மாட்டேனே
என் நிழல்தான் அவ மேல் விழும்போதும்
நான் வெயில வெறுக்க மாட்டேனே

ஆண்: என்ன மாத்தினா ரத்த ஓட்டத்தில்
தேன ஊத்தினாளே

ஆண்: கிளியே கிளியே கீ கீ கிளியே
குயிலே குயிலே கூ கூ குயிலே ஹோ ஹோய்