கலைவாணியே

Singers: Hiphop Tamizha, Sathya Prakash and Kaushik Krish
Lyricist: Hiphop Tamizha(ஹிப்ஹாப் தமிழா)

Kalaivaniye Lyrics in Tamil

ஆண்: கலைவாணியே நீ கலங்காதடி
கடல் தாண்டியும் உனக்காய் வருவேனடி
கலைவாணியே நீ கலங்காதடி
கடல் தாண்டியும் உனக்காய் வருவேனடி

ஆண்: கண் அசைச்சா போதுமே
கை பிடிக்கத் தோணுமே
கை பிடிச்சா போதுமே
உயிர் வரை அது பாயுமே

ஆண்: நீ சிரிச்சா போதுமே
அத ரசிக்க தோணுமே
அத ரசிக்க எனக்குதான்
நூறு வருஷம் வேணுமே

ஆண்: உன்ன அழுங்காம குழுங்காம
அடி நெஞ்சில் சுமப்பேனே
அடமழையில நினையாம
அட காத்துக் கிடப்பேனே

ஆண்: அடியே என் செல்லம்
உனக்கே என் உள்ளம்
ஓரக்கண் பார்வைக்கு அது
ஒரு வாரம் துள்ளும்

ஆண்: கலைவாணியே நீ கலங்காதடி
கடல்தாண்டியும் உனக்காய் வருவேனடி
கலைவாணியே நீ கலங்காதடி
கடல்தாண்டியும் உனக்காய் வருவேனடி

ஆண்: நீ நம்பிக்கை தந்தாடி
உலகத்த பந்தாடி
உன் கூட கொண்டாட தோணுதடி

ஆண்: நீ ஒரு வார்த்த சொன்னாலே
மறுவார்த்தை இல்லாம
அத வாக்கா எண்ணித்தான் வாழுவண்டி

ஆண்: என் மண்ணே நீ உன் மரமா நான்
என் மலரே நீ உன் உரமா நான்
என் கனவே நீ உன் நிஜமா நான் 
என் உயிரே நீ உன் உறவா நான்

ஆண்: நமக்கென்னு தனியா ஒரு தேசம்
அதில் உனக்கென்னு நான் காட்டும் தனி பாசம்
உன் நேசம் ஒளி வீசும் பூவாசம்
என் பிள்ளைகள் உன் போல தான் பேசும்

ஆண்: ஒரு சிலை போல நீ இருக்க
மடிமேல நான் படுக்க
சில்லறையா நீ சிரிக்க
கஷ்டங்கள் நான் மறக்க

ஆண்:
கலைவாணியே
கலைவாணியே

ஆண்: கலைவாணியே நீ கலங்காதடி
கடல்தாண்டியும் உனக்காய் வருவேனடி
கலைவாணியே நீ கலங்காதடி
கடல்தாண்டியும் உனக்காய் வருவேனடி

ஆண்: கலைவாணியே நீ கலங்காதடி

Youtube video

Other Songs From Album

Lyrics Added by Padalvarigal Team