Movie: Padmaavat(பத்மாவத்)
Music: Sanjay Leela Bhansali
Singers: Rahul Vaidya and Shivam Pathak
Lyricist: Madhan Karky(மதன் கார்க்கி)
Unadhallavaa Lyrics in Tamil
—பின்னணி இசை—
ஆண்: எந்தன் யாக்கை
எந்தன் வாழ்க்கை
இவை இரண்டும்
இவை இரண்டும் உனதல்லவா
ஆண்: எந்தன் வீரம்
எந்தன் ஈரம்
அவை இரண்டும் அவ்விரண்டும்
அவை இரண்டும் உனதல்லவா
எந்தன் யாக்ககை
ஆண் குழு: காதலும் நீ என் மோகமும் நீ
எந்தன் பேச்சு மூச்சும் வாழ் வீச்சிலும் நீ
என் தாகமும் நீ நீர் மேகமும் நீ
என் ஆலநாளங்களின் தாளமும் நீ
ஆண் குழு: ஒரு தியானமும் நீ என் வேகமும் நீ
நெஞ்சுறுதி குருதி நீ இறுதியும் நீ
என் வெற்றியும் நீ என் தோல்வியும் நீ
என் தோள்கள் மீது விழும் வாகையும் நீ
ஆண்: எந்தன் நெஞ்சிலே இன்ப துன்பமோ
எந்தன் வான்விழியில் காலை மாலையோ
எந்தன் சிறு வாழ்வில் புகழ் மாட்சியோ
ஆண்: அவை இரண்டும் அவ்விரண்டும்
அவை இரண்டும் அவ்விரண்டும்
அவை இரண்டும் உனதல்லவா
ஆண்: எந்தன் யாக்கை
எந்தன் வாழ்க்கை
இவை இரண்டும்
இவை இரண்டும் உனதல்லவா
—பின்னணி இசை—
