Kadhalikum Pennin Lyrics in Tamil
ஆண்: காதலிக்கும் பெண்ணின் கைகள்
தொட்டு நீட்டினால்
சின்ன தகரம் கூட
தங்கம்தானே
ஆண்: காதலிக்கும் பெண்ணின் வண்ண
கன்னம் ரெண்டிலே
மின்னும் பருவும் கூட
பவளம்தானே
ஆண்: சிந்தும் வேர்வை
தீர்த்தம் ஆகும்
சின்ன பார்வை
மோட்ஷம் ஆகும்
ஆண்: காதலின் சங்கீதமே
ம் ஹும் பூமியின் பூபாளமே
காதலின் சங்கீதமே
ம் ஹும் பூமியின் பூபாளமே
குழு: சா நீ சா
சா ரி கா ரி சா ரி
சா நீ பா நீ சா நீ சா
சா மா மா பா கா ரி சா
குழு: சா நீ சா
சா ரி கா ரி சா ரி
சா நீ பா நீ சா நீ சா
சா மா மா பா கா ரி சா
பெண்: காதலிக்கும் பெண் எழுதும்
கை எழுத்திலே
கண்ட பிழைகள் கூட
கவிதை ஆகுமே
பெண்: காதல் ஒன்றும்
சுத்தம் கித்தம் பார்ப்பதில்லையே
எச்சில் கூட புனிதம் ஆகுமே
ஆண்: குண்டு மல்லி
ரெண்டு ரூபாய்
உன் கூந்தல் ஏறி
உதிரும் பூ கோடி ரூபாய்
பெண்: பஞ்சு மிட்டாய்
அஞ்சு ரூபாய்
நீ பாதி தின்று தந்ததால்
லட்ச ரூபாய்
பெண்: காதலிக்கும் பெண்ணின் கைகள்
தொட்டு நீட்டினால்
குழு: சின்ன தகரம் கூட
தங்கம்தானே
பெண்: காதலிக்கும் பெண்ணின் வண்ண
கன்னம் ரெண்டிலே
குழு: மின்னும் பருவும் கூட
பவளம்தானே
ஆண்: சிந்தும் வேர்வை
தீர்த்தம் ஆகும்
சின்ன பார்வை
மோட்ஷம் ஆகும்
பெண்: காதலின் சங்கீதமே
ஆண்: ம் ஹும் பூமியின் பூபாளமே
பெண்: காதலின் சங்கீதமே
ஆண்: ம் ஹும் பூமியின் பூபாளமே
பெண்: காதல் ஒன்றும்
நல்ல நேரம் பார்ப்பதில்லையே
ராகு காலம் கூட ராசி ஆகுமே
ஆண்: காதலுக்கு அன்னபட்ஷி
தேவை இல்லையே
காக்கை கூட தூது போகுமே
பெண்: காதல் ஜோடி குறைவதில்லை
காதல் என்றும் குற்றமே பார்ப்பதில்லை
ஆண்: இதில் அர்ப்பமானது
எதுவும் இல்லை
இந்த நுட்பம் ஊருக்கு புரியவில்லை
குழு: வானும் மண்ணும் மாறியே போகும்
காதல் என்றும் வாழுமே
ஆதாம் ஏவாள் பாடிய பாடல்
காற்றில் என்றும் கேட்குமே
குழு: காதல் கெட்ட வார்த்தையா
என்ன யாரும் சொல்லலாம்
நீ சொல்லவேண்டும் என்று
குழு: காதல் முள்ளின் வேலியா
என்ன யாரும் செல்லலாம்
நீ செல்லவேண்டும் என்று