ஆகாயம் இத்தனை நாள்

Aagayam Ithanai Naal Lyrics in Tamil
Movie: Unakkum Enakkum(உனக்கும் எனக்கும்)
Music: Devi Sri Prasad
Singer: S. P. Balasubrahmanyam
Lyricist: Na. Muthukumar(நா. முத்துக்குமார்)

Aagayam Ithanai Naal Lyrics in Tamil

ஆண்: ஆகாயம் இத்தனை நாள்
மண்மீது வீழாமல்
தூணாக தாங்குவது காதல்தான்

ஆண்: ஆண்டாண்டு காலங்கள்
பூலோகம் பூப்பூக்க
அழகான காரணமே காதல்தான்

ஆண்: பஞ்ச பூதங்கள் யாவும்
காதலின் அடிமை
நாட்கள் ஏழும் காதலின் கிழமை
ஒன்பது கோள்களும் காதலை சுற்றி வரும்

ஆண்: மரம் ஏற ஏணியைத்தந்தால்
மலையில் ஏறி கொடியேற்றும்
குண்டூசி கையில் தந்தால்
கிணறே தோண்டி விடும்

ஆண்: வெறும் கல்லை வைரக்கல்லாய்
காதல் பார்வை மாற்றிவிடும்
வெந்நீரில் விட்டால் கூட காதல் மீன் நீந்தும்

ஆண்: கஷ்டம் காதலுக்கு இஷ்டம்
வெற்றி பெற வேண்டும் என்றால்
காதல் எதையும் தாங்கிடுமே

ஆண்: முட்டும் கதவுகளை தட்டும்
சறுக்கி விழும் பாதை எல்லாம்
வெற்றி படியாய் மாற்றிடுமே

ஆண்: அண்ணாந்து பார்க்காமல்
விண்மீனை வீழ்த்திவிடும்
துணையாரும் இல்லாமல் ஜெயித்திடுமே

ஆண்: இது நெருப்பில் செய்த
இரும்பு வளையமே
இருமனம் விரும்பி
துணிந்து உடையுமே
பயங்களும் தயக்கமும்
விடுமுறை எடுத்திடுமே

ஆண்: வேரோடு வேர்வை ஊற்றி
காதல் என்றும் வென்று விடும்
வெறியோடு ஓடும் போது
தடையை உடைத்து விடும்

ஆண்: கடல் நீரை தேக்கும் போது
உப்பாய் தானே மாறிவிடும்
கண்ணீரை தேக்கும் காதல்
முத்தாய் மாறிவிடும்

ஆண்: காதல் கேட்டுக் கொண்டு வருமா
தோட்டத்துக்குள் பறவை வந்தால்
வேலி என்ன தடுத்திடுமா

ஆண்: காதல் காட்டுச் செடி போலே
கட்டளைகள் போடும் போதும்
பூக்கள் பூக்க மறுத்திடுமா

ஆண்: புலி வாழும் குகையுள்ளே
கிளி வாழும் வீரத்தை
மனதோடு தந்திடுமே காதல்தான்

ஆண்: இது போகும் வழியோ வெற்றுப்பாதை
திரும்பும் வழியோ வெற்றிப்பாதை
விரும்பிய இதயத்தை
அடைந்திடும் பயணம் இது

ஆண்: கடல் தாண்டும்
பறவைக்கெல்லாம்
வழியில் மரங்கள் கிடையாது
ஆனாலும் கண்டம் தாண்டும்
சிறகுகள் வலிக்காது

ஆண்: மலையேறும் எறும்பின் கால்கள்
வெயிலை மிதித்து உடையாது
மனதோடு காதல் வந்தால் மனிதா தடையேது