வசீகரா

Vaseegara Lyrics in Tamil
Movie: Minnale(மின்னலே)
Music: Harris Jayaraj
Singer: Bombay Jayashree
Lyricist: Thamarai(தாமரை)

Vaseegara Lyrics in Tamil

பெண்: வசீகரா என் நெஞ்சினிக்க
உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்கா
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்

பெண்: வசீகரா என் நெஞ்சினிக்க
உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்கா
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்

பெண்: நான் நேசிப்பதும் சுவாசிப்பதும்
உன் தயவால்தானே
ஏங்குகிறேன் தேங்குகிறேன்
உன் நினைவால் நானே நான்

பெண்: அடை மழை வரும் அதில் நனைவோமே
குளிர் காய்ச்சலோடு சிநேகம்
ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்
குளு குளு பொய்கள் சொல்லி என்னை வெல்வாய்
அது தெரிந்தும் கூட அன்பே
மனம் அதையேதான் எதிர்பார்க்கும்

பெண்: எங்கேயும் போகாமல்
தினம் வீட்டிலேயே நீ வேண்டும்
சில சமயம் விளையாட்டாய்
உன் ஆடைக்குள்ளே நான் வேண்டும்

பெண்: வசீகரா என் நெஞ்சினிக்க
உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்கா
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்

பெண்: தீரும் தீரும்

பெண்: தினமும் நீ குளித்ததும் என்னை தேடி
என் சேலை நுனியால் உந்தன்
தலை துடைப்பாயே அது கவிதை
திருடன் போல் பதுங்கியே திடீரென்று
பின்னாலிருந்து என்னை
நீ அணைப்பாயே அது கவிதை

பெண்: யாரேனும் மணி கேட்டால்
அதை சொல்லக்கூடத் தெரியாதே
காதலெனும் முடிவிலியில்
கடிகார நேரம் கிடையாதே

பெண்: வசீகரா என் நெஞ்சினிக்க
உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்கா
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்

பெண்: நான் நேசிப்பதும் சுவாசிப்பதும்
உன் தயவால்தானே
ஏங்குகிறேன் தேங்குகிறேன்
உன் நினைவால் நானே நான்