Vaan Vaan Lyrics in Tamil
—பின்னணி இசை—
ஆண்: கனவோடு கனவோடு
கதை பேச வந்தேனே
நினைவோடு நினைவோடு
நிறம் மாறி நின்றேனே
ஆண்: நிகழாத பல மாயம்
உன்னாலே கண்டேனே
உணராத சந்தோஷம்
உன்னாலே கண்டேனே
ஆண்: வான் வான் வான் வான் வானம்
எனக்கென சிறு மழை தூவாதா
அதில் நான் நான் நான் நான் நானும்
தனக்கென உயிர் கொடு வா
ஆண்: நட்போடு சோகம் இல்லை
நெஞ்சோடு பாரம் இல்லை
உன்னோட நடந்திட மறந்திடும் பாதை
ஆண்: உணராமல் பாதை இல்லை
உடையாமல் காதல் இல்லை
நதியோடு இணைந்திட காயம் இல்லை
—பின்னணி இசை—
ஆண்: கனவோடு கனவோடு
கதை பேச வந்தேனே
நினைவோடு நினைவோடு
நிறம் மாறி நின்றேனே
நிகழாத பல மாயம்
உன்னாலே கண்டேனே
—பின்னணி இசை—
ஆண்: ஒரு நட்பில்லாமல் நிம்மதி
இந்த வாழ்வில் ஏது வெண்மதி
கை கோர்த்து போகும் மின்மினி
முழு நெஞ்சம் எல்லாம் உன் பனி
ஆண்: இந்த நாளை இல்லை
நேற்றும் இல்லை மனதோரம்
சிறு ரெக்கை கட்டி ஓடும் இந்த கடிகாரம்
சில நெஞ்சம் சேரும் பயணங்கள் அழகாகும்
—பின்னணி இசை—
ஆண்: வான் வான் வான் வான் வானம்
எனக்கென சிறு மழை தூவாதா
அதில் நான் நான் நான் நான் நானும்
தனக்கென உயிரே கொடு வா
ஆண்: நட்போடு சோகம் இல்லை
நெஞ்சோடு பாரம் இல்லை
உன்னோட நடந்திட மறந்திடும் பாதை
ஆண்: உணராமல் பாதை இல்லை
உடையாமல் காதல் இல்லை
நதியோடு இணைந்திட காயம் இல்லை
ஆண்: கனவோடு கனவோடு
கதை பேச வந்தேனே
நினைவோடு நினைவோடு
நிறம் மாறி நின்றேனே
நிகழாத பல மாயம்
உன்னாலே கண்டேனே
—பின்னணி இசை—


