தங்கமே தங்கமே

Thangame Thangame Lyrics in Tamil
Song Name: Thangame Thangame
Music: Thaman S
Singers: Dheeraj, Sahithi, Adviteeya, Prakruthi, Pranati, Rajini and Sruthi
Year: 2026

Thangame Thangame Lyrics in Tamil

—பின்னணி இசை—

பெண் குழு: சேலைய கட்டுற சிட்டக் கிளியே
மலையில் நிக்கிற கிட்டா கொடியே
மாப்பிள்ளை சொக்குற எட்டக் கையே
பாத்ததும் கொட்டுற மெட்டா எடியே

பெண் குழு: தேவதையா வந்தவளே
ரெக்க மட்டும் ஒட்டிக்கோ
பேரழகா நின்னவளே
கண்ணு படும் சுத்திப் போட வேண்டுமடி

பெண் குழு: பந்தள தோரணத்த கட்டி நீங்க
காலமெல்லாம் ஒன்னாக
வாழ வேணும் ஒட்டி

பெண் குழு: அடி ஆரா செவப்பு அட்சத செவப்பு
மாரா செவப்பு கன்னத்துல
அடி கோடா செவப்பு குங்கும செவப்பு
வாடா செவப்பு நெத்தியில

பெண் குழு: நுணி வெக்கம் பக்கம் வந்திருச்சாம்
ஒளி வட்டம் மட்டும் சேர்ந்துருச்சாம்
நம்ப பொண்ணு கொஞ்சம் கில்லாடிங்க
கட்டைய கொடுக்கும் வாலாட்டி
நம்ப பையன் சொக்கத் தங்கமுங்க
வைக்கணும் மாமன காப்பாத்தி

பெண் குழு: கொஞ்சும் மல்லிக கொடம் மந்திர வடம்
சீரா வந்தாடி
அவ நிக்கிற இடம் பூக்குற தடம்
ஊரே மெச்சும் செல்லக் குட்டி

பெண் குழு: தங்கமே தங்கமே
சந்தனம் வைக்குற தங்கமே
சக்கரை கொட்டுற அங்கமே
சுந்தர பொட்டலமே

பெண் குழு: தங்கமே தங்கமே
ராத்திரி வரட்டும் தங்கமே
சுண்டெலி ஆகிடும் சிங்கமே
உன்னையே சுத்திடுமே

—பின்னணி இசை—

பெண் குழு: நட்சத்திரம் அத்தனையும்
நான் தரேன் உனக்கு
நெத்தி தொடும் ஒத்த முடி
நீ கொடு எனக்கு

பெண் குழு: கடப் பல்லில் சிக்கிற வெத்தலையே
குடுக்குற அக்கற பத்தலையே
அள்ளி சென்று அரசி மகளா உரசி
நிக்குற தன்னாலே

பெண் குழு: மயக்குற சித்திர புத்திரியே
சிரிப்புல முத்துற குத்துரியே
தட்டு தட்ட ஒத்தியோம் ஒத்தியோம்
லட்சமும் மச்சமும் கொண்டு வர

பெண் குழு: தங்கமே தங்கமே
சந்தனம் வைக்குற தங்கமே
சக்கரை கொட்டுற அங்கமே
சுந்தர பொட்டலமே

பெண் குழு: தங்கமே தங்கமே
ராத்திரி வரட்டும் தங்கமே
சுண்டெலி ஆகிடும் சிங்கமே
உன்னையே சுத்திடுமே

—பின்னணி இசை—

பெண்: மகராணி முகம் சிரிச்சா
மனசில் விழுது பால் ஆறு
அட ஒருத்தேன் மலர விட்டு
பறந்த ரெக்கையில் கோளாறு

பெண்: மகராணி முகம் சிரிச்சா
மனசில் விழுது பால் ஆறு
அட ஒருத்தேன் மலர விட்டு
பறந்த ரெக்கையில் கோளாறு

பெண்: கண்ண குழியோ உள்ள இழுக்குதடி
எடறி விழுந்தேன் உன்னால
கண்ணு முழியோ உள்ள கிருக்குதடி
செப்படி செஞ்சவளே

பெண்: தங்கமே தங்கமே
தங்கமே தங்கமே

பெண் குழு: தங்கமே தங்கமே
சந்தனம் வைக்குற தங்கமே
சக்கரை கொட்டுற அங்கமே
சுந்தர பொட்டலமே

பெண் குழு: தங்கமே தங்கமே
ராத்திரி வரட்டும் தங்கமே
சுண்டெலி ஆகிடும் சிங்கமே
உன்னையே சுத்திடுமே

—பின்னணி இசை—

Youtube video

Other Songs From Album

Lyrics Added by Padalvarigal Team