Urvasi Urvasi Lyrics in Tamil
ஆண்: மருஹாபா
மருஹாபா மருஹாபா
மருஹாபா மருஹாபா
ஆண்: ஊர்வசி ஊர்வசி
டேக் இட் ஈசி ஊர்வசி
ஊசி போல ஒடம்பிருந்தா
தேவை இல்ல பார்மசி
ஆண்: ஊர்வசி ஊர்வசி
டேக் இட் ஈசி ஊர்வசி
ஊசி போல ஒடம்பிருந்தா
தேவை இல்ல பார்மசி
ஆண்: வாழ்க்கையில் வெல்லவே
குழு: டேக் இட் ஈசி பாலிசி
ஆண்: வானவில் வாழ்க்கையில்
குழு: வாலிபம் ஒரு பேண்டசி
ஆண்: ஊர்வசி ஊர்வசி
டேக் இட் ஈசி ஊர்வசி
ஆண்: பேசடி ரதியே ரதியே
தமிழில் வார்த்தைகள் மூன்று லட்சம்
நீயடி கதியே கதியே
ரெண்டு சொல்லடி குறைந்த பட்சம்
குழு: வாழ்க்கையில் வெல்லவே
டேக் இட் ஈசி பாலிசி
வானவில் வாழ்க்கையில்
வாலிபம் ஒரு பேண்டசி
ஆண்: ஒளியும் ஒலியும் கரண்ட்டு போனா
குழு: டேக் இட் ஈசி பாலிசி
ஆண்: ஒழுங்கா படிச்சும் பெயிலா போனா
குழு: டேக் இட் ஈசி பாலிசி
ஆண்: தண்டசோருன்னு அப்பன் சொன்னா
குழு: டேக் இட் ஈசி பாலிசி
ஆண்: வழுக்கு தலையன் திருப்பதி போனா
குழு: டேக் இட் ஈசி பாலிசி
ஆண்: ஊர்வசி ஊர்வசி
டேக் இட் ஈசி ஊர்வசி
ஆண்: கேளடி ரதியே ரதியே
உடம்பில் நரம்புகள் ஆறு லட்சம்
தெரியுமா சகியே சகியே
காதல் நரம்பு எந்த பக்கம்
குழு: வாழ்க்கையில் வெல்லவே
டேக் இட் ஈசி பாலிசி
வானவில் வாழ்க்கையில்
வாலிபம் ஒரு பேண்டசி
ஆண்: கண்டதும் காதல் வழியாது
கண்களால் ரத்தம் வழியாது
பூனையில் சைவம் கிடையாது
ஆண்களில் ராமன் கிடையாது
ஆண்: புரட்சிகள் ஏதும் செய்யாமல்
பெண்ணுக்கு நன்மை விளையாது
கண்ணகி சிலைதான் இங்குண்டு
சீதைக்கு தனியா சிலையேது
ஆண்: பிலிமு காட்டி பொண்ணு பாக்கலேன்னா
குழு: டேக் இட் ஈசி பாலிசி
ஆண்: பக்கத்து சீட்டுல பாட்டி ஒக்காந்தா
குழு: டேக் இட் ஈசி பாலிசி
ஆண்: பண்டிக தேதி சண்டேயில் வந்தா
குழு: டேக் இட் ஈசி பாலிசி
ஆண்: அழுத காதலி அண்ணான்னு சொன்னா
குழு: டேக் இட் ஈசி பாலிசி
ஆண்: ஊர்வசி ஊர்வசி
டேக் இட் ஈசி ஊர்வசி
ஊசி போல ஒடம்பிருந்தா
தேவை இல்ல பார்மசி
குழு: வாழ்க்கையில் வெல்லவே
டேக் இட் ஈசி பாலிசி
வானவில் வாழ்க்கையில்
வாலிபம் ஒரு பேண்டசி
ஆண்: பகலிலே கலர்கள் பாராமல்
இருட்டிலே கண்ணடித்தென்ன பயன்
சுதந்திரம் மட்டும் இல்லாமல்
சொர்கமே இருந்தும் என்ன பயன்
குழு: பிகருகள் யாரும் இல்லாமல்
வகுப்புகள் இருந்தும் என்ன பயன்
இருபது வயதில் ஆடாமல்
அறுபதில் ஆடி என்ன பயன்