Unakkul Naane Lyrics in Tamil
ஆண்: மின்னும் பனிச்சாரல்
உன் நெஞ்சில் சேர்ந்தாலே
கண்ணில் உன்னை வைத்து
பெண் தைத்துக் கொண்டாலே
ஆண்: வெண்ணிலா துவி
தன் காதல் சொன்னாலே
மல்லிகை வாசம்
உன் பேச்சில் கண்டாலே
ஆண்: பொன் மான் இவளா
உன் வானவில்லா
பொன் மான் இவளா
உன் வானவில்லா
பெண்: உனக்குள் நானே உருகும் இரவில்
உள்ளத்தை நான் சொல்லவா
மருவும் மனதின் ரகசிய அறையில்
ஒத்திகை பார்த்திடவா
பெண்: சிறுகச் சிறுக உன்னில் என்னை
தொலைத்து மொழி சொல்லவா
சொல்லால் சொல்லும் என்னை
வாட்டும் ரணமும் தேன் அல்லவா
பெண்: உனக்குள் நானே உருகும் இரவில்
உள்ளத்தை நான் சொல்லவா
பெண்: ஏனோ நம் பொய் வார்த்தையேதான்
ஏன் அதில் உன் என் மௌனமேதான்
உதட்டில் சிரிப்பை தந்தாய்
மனதில் கனத்தை தந்தாய்
பெண்: ஒரு முறை உன்னை
எனக்கென்று சுவாசிக்கவா
மறுமுறை உன்னை
புதிதாக சுவாசிக்கவா
பெண்: உனக்குள் நானே உருகும் இரவில்
உள்ளத்தை நான் சொல்லவா
மருவும் மனதின் ரகசிய அறையில்
ஒத்திகை பார்த்திட வா
பெண்: தீபோல் தேன்போல் சலனமே தான்
மதியினும் நிம்மதி சிதையவேதான்
நிழலை விட்டுச் சென்றாயே
நினைவை வெட்டிச் சென்றாயே
பெண்: இனி ஒரு பிறவி
உன்னோடு வாழ்ந்திடவா
அது வரை என்னை
காற்றோடு சேர்த்திடவா
பெண்: உனக்குள் நானே உருகும் இரவில்
உள்ளத்தை நான் சொல்லவா
மருவும் மனதின் ரகசிய அறையில்
ஒத்திகை பார்த்திட வா
பெண்: சிறுகச் சிறுக உன்னில் என்னை
தொலைத்து மொழி சொல்லவா
சொல்லால் சொல்லும் என்னை
வாட்டும் ரணமும் தேன் அல்லவா
பெண்: ரணமும் தேன் அல்லவா
ரணமும் தேன் அல்லவா