Un Sirippinil Lyrics in Tamil – Thamarai
பெண்: உன் சிரிப்பினில் உன் சிரிப்பினில்
என் மனதின் பாதியும் போக
உன் இமைகளின் கண் இமைகளின்
மென்பார்வையில் மீதியும் தேய
பெண்: ம்ம் இன்று நேற்று என்று இல்லை
ஏன் இந்த நிலை
ம்ம் உன்னைக்கண்ட நாளினின்றே
நான் செய்யும் பிழை
பெண்: உன் சிரிப்பினில் உன் சிரிப்பினில்
என் மனதின் பாதியும் போக
உன் இமைகளின் கண் இமைகளின்
மென்பார்வையில் மீதியும் தேய
பெண்: உனக்குள் இருக்கும் மயக்கம்
அந்த உயரத்து நிலவை அழைக்கும்
இதழின் விளிம்பு துளிர்க்கும்
என் இரவினை பனியில் நனைக்கும்
பெண்: எதிரினில் நான் எரிகிற நான்
உதிர்ந்திடும் மழைச்சரம் நீயே
ஒருமுறை அல்ல முதல்முறை அல்ல
தினம் தினம் என்னை சூழும் தீ
ஆண்: உன் சிரிப்பினில் உன் சிரிப்பினில்
என் மனதின் பாதியும் போக
உன் இமைகளின் கண் இமைகளின்
மென்பார்வையில் மீதியும் தேய
ஆண்: முதல்நாள் பார்த்த வனப்பு
துளி குறையவும் இல்லை உனக்கு
உறக்கம் விழிப்பில் கனவாய்
உனைக்காண்பதே வழக்கம் எனக்கு
ஆண்: அருகினிலே வருகையிலே
துடிப்பதை நிறுத்துது நெஞ்சம்
முதல் முதல் இன்று நிகழ்கிறதென்று
நடிப்பதில் கொஞ்சம் வஞ்சமே
பெண்: உன் சிரிப்பினில் உன் சிரிப்பினில்
என் மனதின் பாதியும் போக
ஆண்: உன் இமைகளின் கண் இமைகளின்
மென்பார்வையில் மீதியும் தேய
பெண்: ம்ம் இன்று நேற்று என்று இல்லை
ஏன் இந்த நிலை
ம்ம் உன்னைக்கண்ட நாளினின்றே
நான் செய்யும் பிழை