Un Paarvaiyil Lyrics in Tamil
ஆண்: ஹ்ம்ம் உன் பார்வையில் பைத்தியம் ஆனேன்
உன் வார்த்தையில் வாக்கியம் ஆனேன்
உன் வெக்கத்தை வேடிக்கை பார்த்தேன் மயங்கினேன்
ஆண்: ஒரு நியாபக அலை என வந்து
என் நெஞ்சினை நனைத்தவள் நீயே
என் வாலிப திமிரினை உன்னால் மாற்றினேன்
ஆண்: பெண்ணாக இருந்தவள் உன்னை
நான் இன்று காதல் செய்தேன்
உன்னோட அறிமுகத்தாலே
நான் உன்னில் மறைமுகம் ஆனேன்
நரம்பெல்லாம் இசை மீட்ட குதித்தேன் நானே
ஆண்: ஹேய் உன் பார்வையில் பைத்தியம் ஆனேன்
உன் வார்த்தையில் வாக்கியம் ஆனேன்
உன் வெக்கத்தை வேடிக்கை பார்த்தேன் மயங்கினேன்
ஆண்: எது இதுவோ எது இதுவோ
உன் மௌனம் சொல்கின்ற எழுத்தில்லா ஓசைகள்
என்னென்று நான் சொல்லுவேன்
பெண்: இது அதுவோ ஹ்ம் ஹ்ம்
இது அதுவோ ஹ்ம் ஹ்ம்
சொல்லாத சொல்லுக்கு இல்லாத வார்த்தைக்கு
ஏதேதோ அர்த்தங்களே
ஆண்: பெண் தோழன் நான் ஆண் தோழி நீ
நட்புக்குள் நம் காதல் வாழும்
பெண்: ஆண் ஆசை நான் பெண் ஆசை நீ
ஆசைகள் பேராசைதான்
ஆண்: உன் பார்வையில் பைத்தியம் ஆனேன்
உன் வார்த்தையில் வாக்கியம் ஆனேன்
உன் வெக்கத்தை வேடிக்கை பார்த்தேன் மயங்கினேன்
பெண்: உனதருகே இருப்பதனால்
இரவுக்கு தெரியாத பகலுக்கு புரியாத
பொழுதொன்றை நீ காட்டினாய்
ஆண்: இதயத்தில் நீ இருப்பதனால்
நான் தூங்கும் நேரத்தில் என்னுள்ளே தூங்காமல்
நெஞ்சுக்குள் வாயாடினாய்
பெண்: கண்ணாடி நீ கடிகாரம் நான்
உன்னுள்ளே ஓடோடி வாழ்வேன்
ஆண்: காதல் என்னும் கடுதாசி நீ
என்றென்றும் அன்புடன் நான்
ஆண்: ஹேய் உன் பார்வையில் பைத்தியம் ஆனேன்
உன் வார்த்தையில் வாக்கியம் ஆனேன்
உன் வெக்கத்தை வேடிக்கை பார்த்தேன் மயங்கினேன்
பெண்: ஒரு நியாபக அலை என வந்து
உன் நெஞ்சினை நனைத்தவள் நானே
உன் வாலிப திமிரினை நானும் மயங்கினேன்
ஆண்: பெண்ணாக இருந்தவள் உன்னை
நான் இன்று காதல் செய்தேன்
பெண்: உன்னோட அறிமுகத்தாலே
நான் உன்னில் மறைமுகம் ஆனேன்
ஆண்: நரம்பெல்லாம் இசை மீட்ட குதித்தேன் நானே