லஜ்ஜாவதியே

Lajjavathiye Lyrics in Tamil

Lajjavathiye Lyrics in Tamil

ஆண்: லஜ்ஜாவதியே என்ன அசத்துற ரதியே
லஜ்ஜாவதியே என்ன அசத்துற ரதியே

ஆண்: ராட்சசியோ தேவதையோ
ரெண்டும் சேர்ந்த பெண்ணோ
அடை மழையோ அனல் வெயிலோ
ரெண்டும் சேர்ந்த கண்ணோ

ஆண்: தொட்டவுடன் ஓடுறீயே
தொட்டவுடன் ஓடுறீயே
ஹே தொட்டாச்சிணுங்கி பெண்தானோ
ஹே தொட்டாச்சிணுங்கி பெண்தானோ
அழகினாலே அடிமையாக்கும்
ராஜ ராஜ ராணி

ஆண்: அடி லஜ்ஜாவதியே
என்ன அசத்துற ரதியே
லஜ்ஜாவதியே என்ன அசத்துற ரதியே

ஆண்: பூவரச இலையிலே
பீப்பீ செஞ்சி ஊதினோம்
பள்ளிக்கூடம் பாடம் மறந்து
பட்டாம்பூச்சி தேடினோம்
தண்ணிப்பாம்பு வரப்பில் வர
தலை தெறிக்க ஓடினோம்

ஆண்: பனங்காயின் வண்டியில்
பசு மாட்டு தொழுவத்தை
சுற்றி வந்து பாம்பேக்கு
போனதாக சொல்லினோம்

ஆண்: அடடா வசந்தம்
அதுதான் வசந்தம்
மீண்டும் அந்த காலம் வந்து
மழலையாக மாற்றுமா

ஆண்: லஜ்ஜாவதியே என்ன அசத்துற ரதியே
அடி லஜ்ஜாவதியே என்ன அசத்துற ரதியே

ஆண்: காவேரி நதியிலே
தூண்டில்கள் போட்டதும்
கண்ணே உன் தூண்டில் முள்ளில்
குட்டி தவளை விழுந்ததும்
கை கொட்டி கேலி செய்த
ஞாபகங்கள் மறக்குமா

ஆண்: கட்ட வண்டி மையினால்
கட்ட பொம்மன் மீசையை
கண்ணே நீ வரைந்து விட்டு
ராஜ ராஜன் என்றதும்

ஆண்: அடடா வசந்தம்
அதுதான் வசந்தம்
காலம் கடந்து போன பின்னும்
காதல் கடந்து போகுமா

ஆண்: லஜ்ஜாவதியே என்ன அசத்துற ரதியே
லஜ்ஜாவதியே என்ன அசத்துற ரதியே
ராட்சசியோ தேவதையோ
ரெண்டும் சேர்ந்த பெண்ணோ
அடை மழையோ அனல் வெயிலோ
ரெண்டும் சேர்ந்த கண்ணோ

ஆண்: தொட்டவுடன் ஓடுறீயே ஹே
தொட்டாச்சிணுங்கி பெண்தானோ
அழகினாலே அடிமையாக்கும்
ராஜ ராஜ ராணி

ஆண்: லஜ்ஜாவதியே என்ன அசத்துற ரதியே
அடி லஜ்ஜாவதியே என்ன அசத்துற ரதியே

Youtube video

Other Songs From Album

Lyrics Added by Padalvarigal Team