உன் மார்பில் விழி மூடி

Un Marbil Vizhi Moodi Lyrics in Tamil
Movie: Ninaithen Vandhai(நினைத்தேன் வந்தாய்)
Music: Deva
Singer: K. S. Chithra
Lyricist: Palani Bharathi(பழனி பாரதி)

Un Marbil Vizhi Moodi Lyrics in Tamil

பெண்: ஆசை நாயகனே
சௌக்கியமா
உந்தன் நலம் நாடும்
பிரியமானவளின் கடிதம்

பெண்: உன் மார்பில் விழி மூடி
தூங்குகிறேன் தினமும் கனவில்
உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன்
விடியும் பொழுதில்

பெண்: எந்தன் வளையல் குலுங்கியது
கொலுசும் நழுவியது
வெக்கத்தில் கன்னங்கள் கூசியது
மனம் காலடி ஓசையை
எதிர்பார்த்து துடிக்கின்றது அன்பே

பெண்: உன் மார்பில் விழி மூடி
தூங்குகிறேன் தினமும் கனவில்

பெண்: சின்னக் குயில்கள்
உன்னை உன்னை நலம் கேட்குதா
நெஞ்சில் பரவும்
அலை அலை உன்னை ஈரம் ஆக்குதா

பெண்: மெல்ல நகரும்
பகல் பகல் யுகம் ஆகுதா
மூச்சு விட்டதால் தலையணை
அது தீயில் வேகுதா

பெண்: நெஞ்சம் எதிலும் ஒட்டாமல்
கண்ணில் கனவும் வற்றாமல்
தினமும் தினமும் உருகும் மனது
ஏன் இந்த நிலைமை தெரியவில்லை
இந்தப் பரவசம் உனக்குள்ளும் இருக்கிறதா
அன்பே

பெண்: உன் மார்பில் விழி மூடி
தூங்குகிறேன் தினமும் கனவில்
உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன்
விடியும் பொழுதில்

பெண்: காலை வெயில் நீ
பனித்துளி இவள் அல்லவா
என்னைக் குடித்து
இனி இனி உன் தாகம் தீர்க்கவா

பெண்: துள்ளும் நதி நீ
இவள் அதில் நுரை அல்லவா
இருவருக்கும் இடைவெளி
இனி இல்லை அல்லவா

பெண்: நிலவில் வேகம் உன்னாலே
வருவாய் எந்தன் முன்னாலே
அழகும் உயிரும் உனக்கே சொந்தம்
ஏராளம் ஆசை நெஞ்சில் உண்டு
அதை எழுதிட நாணங்கள் தடுக்கிறதே
அன்பே

பெண்: உன் மார்பில் விழி மூடி
தூங்குகிறேன் தினமும் கனவில்
உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன்
விடியும் பொழுதில்

Youtube video

Lyrics Added by Padalvarigal Team