Unai Ninaithu Naan Enai Lyrics in Tamil
பெண்: உன்னை நினைத்து நான் என்னை மறப்பது
அதுதான் அன்பே காதல் காதல்
ஆண் மற்றும் பெண் குழு: காதல் காதல்
ஆண்: உனக்குள்ளே நான் என்னைக் கரைப்பது
அதுதான் அன்பே காதல் காதல்
ஆண் மற்றும் பெண் குழு: காதல் காதல்
பெண்: இந்த வாா்த்தைக்கு ஒருவித அா்த்தம் இல்லாதது காதல்
ஆண்: இரு பாா்வைகள் மௌனத்தில் பேசுகின்ற மொழி காதல்
பெண்: இங்கு கீழ்த்திசை சூாியன் மேல் திசை தோன்றினும்
பாதை மாறிப் போகாது
ஆண் மற்றும் பெண் குழு: காதல் காதல் காதல் காதல்
ஆண்: உன்னை நினைத்து நான் என்னை மறப்பது
அதுதான் அன்பே
ஆண் மற்றும் பெண் குழு: காதல் காதல் காதல் காதல்
பெண்: அன்றாடம் நூறுவகை பூப்பூக்கும்
ஆனாலும் காயாகும் சில பூக்கள்தான்
ஆண்: எல்லோா்க்கும் காதல் வரும் என்றாலும்
கல்யாண வைபோகம் சில போ்க்குதான்
பெண்: காதலன் காதலி தோற்பதுண்டு
காதல்கள் எப்போதும் தோற்பதில்லை
ஆண்: ஊா்மனம் ஒருவரை ஏற்பதுண்டு
இன்னொரு உறவினை ஏற்பதில்லை
பெண்: நிறம் மாறிப் போகாமல்
சுரம் மாறிப் போகாமல்
உயிா் பாடும் ஒரு பாடல்தான்
ஆண் மற்றும் பெண் குழு: காதல் காதல் காதல் காதல்
ஆண்: உன்னை நினைத்து நான் என்னை மறப்பது
அதுதான் அன்பே
ஆண் மற்றும் பெண் குழு: காதல் காதல் காதல் காதல்
ஆண்: பூவிழியில் ஏற்றி வைத்த தீபம் இது
புயல் காற்று அடித்தாலும் அணையாதது
பெண்: புன்னகையில் போட்டு வைத்த கோலம் இது
மழை மேகம் பொழிந்தாலும் அழியாதது
ஆண்: நாயகன் ஆடிடும் நாடகம்தான்
யாருக்கு யாா் என்று எழுதி வைத்தாா்
பெண்: நடக்கட்டும் திருமணம் நல்ல படி
இங்கொரு பெண் மனம் வாழ்த்தும் படி
ஆண்: ஒரு ஜென்மம் போனாலும்
பெண்: ஒரு ஜென்மம் போனாலும்
மறு ஜென்மம் ஆனாலும்
பெண்: ஒரு ஜென்மம் போனாலும்
மறு ஜென்மம் ஆனாலும்
தொடா்கின்ற கதைதான் அம்மா
ஆண் மற்றும் பெண் குழு: காதல் காதல் காதல் காதல்
பெண்: உன்னை நினைத்து நான் என்னை மறப்பது
அதுதான் அன்பே
ஆண் மற்றும் பெண் குழு: காதல் காதல் காதல் காதல்
ஆண் மற்றும் பெண்: உனக்குள்ளே நான் என்னைக் கரைப்பது
அதுதான் அன்பே
ஆண் மற்றும் பெண் குழு: காதல் காதல் காதல் காதல்