தமிழா தமிழா

Movie: Roja(ரோஜா)
Music: A. R. Rahman
Singer: Hariharan
Lyricist: Vairamuthu(வைரமுத்து)

Thamizha Thamizha Lyrics in Tamil

ஆண்: தமிழா தமிழா நாளை நம் நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே
தமிழா தமிழா நாளை நம் நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே

ஆண்: என் வீடு தாய் தமிழ் நாடு
என்றே சொல்லடா
என் நாமம் இந்தியன் என்றே
என்றும் நில்லடா

ஆண்: தமிழா தமிழா நாளை நம் நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே

குழு: நிறம் மாறலாம் குணம் ஒன்றுதான்
இடம் மாறலாம் நிலம் ஒன்றுதான்
மொழி மாறலாம் பொருள் ஒன்றுதான்
கலி மாறலாம் கொடி ஒன்றுதான்

குழு: திசை மாறலாம் நிலம் ஒன்றுதான்
இசை மாறலாம் மொழி ஒன்றுதான்
நம் இந்தியா அது ஒன்றுதான் வா

ஆண்: தமிழா தமிழா கண்கள் கலங்காதே
விடியும் விடியும் உள்ளம் மயங்காதே
தமிழா தமிழா கண்கள் கலங்காதே
விடியும் விடியும் உள்ளம் மயங்காதே

ஆண்: உனக்குள்ளே இந்திய ரத்தம்
உண்டா இல்லையா
ஒன்றான பாரதம் உன்னை
காக்கும் இல்லையா

ஆண்: தமிழா தமிழா நாளை நம் நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே

குழு: நவபாரதம் பொதுவானது
இது வேர்வையால் உருவானது
பல தேகமோ எருவானது
அதனால் இது உருவானது

குழு: சுப தண்டமாய் வலுவானது
அட வானிலா விழாவென்பது
இம் மண்ணிலா பிரிவென்பது எழு வா

Youtube video
Lyrics Added by Padalvarigal Team