ரோஜா ரோஜா

Roja Roja Lyrics in Tamil
Movie: Kadhalar Dhinam(காதலர் தினம்)
Music: A. R. Rahman
Singer: P. Unnikrishnan
Lyricist: Vaali(வாலி)

Roja Roja Lyrics in Tamil

ஆண்: ரோஜா ரோஜா

ஆண்: ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா

ஆண்: கண்ட பின்னே உன்னிடத்தில்
என்னைவிட்டு வீடுவந்தேன்
உனைத் தென்றல் தீண்டவும் விடமாட்டேன்
அந்தத் திங்கள் தீண்டவும் விடமாட்டேன்
உனை வேறு கைகளில் தரமாட்டேன்
நான் தரமாட்டேன் நான் தரமாட்டேன்

ஆண்: ரோஜா ரோஜா
ரோஜா ரோஜா

ஆண்: நிலத்தினில் உன் நிழல் விழ ஏங்குவேன்
நிழல் விழுந்தால் மணலையும் மடியினில் தாங்குவேன்
உடையென எடுத்து எனை உடுத்து
நூலாடைக் கொடிமலர் இடையினை உறுத்தும் ரோஜா

ஆண்: உன் பேர் மெல்ல நான் சொன்னதும்
என் வீட்டு ரோஜாக்கள் பூக்கின்றன
ஓர் நாள் உன்னைக் காணாவிடில்
எங்கே உன் அன்பென்று கேட்கின்றன
நீ வந்தால் மறுகணம் விடியும் என் வானமே

ஆண்: மழையில் நீ நனைகையில்
எனக்குக் காய்ச்சல் வரும்
வெயிலில் நீ நடக்கையில்
எனக்கு வேர்வை வரும்
உடல்களால் ரெண்டு உணர்வுகள் ஒன்று
ரோஜா ரோஜா ரோஜா

ஆண்: ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
கண்ட பின்னே உன்னிடத்தில்
என்னைவிட்டு வீடுவந்தேன்

ஆண்: இளையவளின் இடையொரு நூலகம்
படித்திடவா பனிவிழும் இரவுகள் ஆயிரம்
இடைவெளி எதற்கு சொல் நமக்கு
உன் நாணம் ஒரு முறை விடுமுறை எடுத்தால் என்ன

ஆண்: என்னைத் தீண்டக் கூடாதென
வானோடு சொல்லாது வங்கக்கடல்
என்னை ஏந்தக் கூடாதென
கையோடு சொல்லாது புல்லாங்குழல்
நீ தொட்டால் நிலவினில் கறைகளும் நீங்குமே

ஆண்: விழிகளில் வழிந்திடும் அழகு நீர்வீழ்ச்சியே
எனக்கு நீ உனைத்தர எதற்கு ஆராய்ச்சியே
உனைவிட வேறு நினைவுகள் ஏது
ரோஜா ரோஜா ரோஜா

ஆண்: ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
கண்ட பின்னே உன்னிடத்தில்
என்னைவிட்டு வீடுவந்தேன்

ஆண்: ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
ரோஜா ரோஜா

Other Songs From Kadhalar Dhinam