பூக்கள் பூக்கும் தருணம்

Pookal Pookum Tharunam Lyrics in Tamil
Movie: Madrasapattinam(மதராசபட்டினம்)
Music: G.V. Prakash Kumar
Singers: Andrea Jeramiah, G.V. Prakash Kumar and Harini
Lyricist: Na. Muthukumar(நா. முத்துக்குமார்)

Pookal Pookum Tharunam Lyrics in Tamil

ஆண்: தானா தோ தனானா
தானா தோ தனானா
தானா தோன் தனானா தானானேனானா

ஆண்: தானா தோ தனானா
தானா தோ தனானா
தானா தோன் தனானா தானானேனானா

ஆண்: பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே
பார்த்ததாரும் இல்லையே
பெண்: உலரும் காலை பொழுதை
முழு மதியும் பிரிந்து போவதில்லையே

ஆண்: நேற்றுவரை நேரம் போகவில்லையே
உனதருகே நேரம் போதவில்லையே

பெண்: எதுவும் பேசவில்லையே
இன்று ஏனோ எதுவும் தோன்றவில்லையே
இது எதுவோ

ஆண்: இரவும் விடியவில்லையே
அது விடிந்தால் பகலும் முடியவில்லையே
பூந்தளிரே

ஆண்: தானா தோ தனானா
தானா தோ தனானா
தானா தோன் தனானா தானானேனானா

ஆண்: தானா தோ தனானா
தானா தோ தனானா
தானா தோன் தனானா தானானேனானா

ஆண்: வார்த்தை தேவையில்லை
வாழும் காலம் வரை
பாவை பார்வை மொழி பேசுமே

பெண்: நேற்று தேவை இல்லை
நாளை தேவையில்லை
இன்று இந்த நொடி போதுமே

ஆண்: வேரின்றி விதையின்றி
விண் தூவும் மழை இன்றி
இது என்ன இவன் தோட்டம் பூப்பூக்குதே

பெண்: வாள் இன்றி போர் இன்றி
வலிக்கின்ற யுத்தம் இன்றி
இது என்ன இவனுக்குள் என்னை வெல்லுதே

ஆண்: இதயம் முழுதும் இருக்கும்
இந்த தயக்கம் எங்கு கொண்டு நிறுத்தும்
பெண்: இதை அறிய எங்கு கிடைக்கும் விளக்கம்
அது கிடைத்தால் சொல்ல வேண்டும் எனக்கும்

ஆண்: பூந்தளிரே

பெண்: ஓ வேர் வுட் ஐ பி
வித்அவுட் திஸ் ஜாய்
இன்சைட் ஆப் மீ
இட் மேக்ஸ் மீ வான்ட்
டு கம் அலைவ்
இட் மேக்ஸ் மீ வான்ட் டு ப்ளை
இன்டு தி ஸ்கை

பெண்: ஓ வேர் வுட் ஐ பி
இப் ஐ டிட்நாட் ஹவ் யூ நெக்ஸ்ட் டு மீ
ஓ வேர் வுட் ஐ பி ஓ வேர்
ஓ வேர் ஓ வேர்

ஆண்: எந்த மேகம் இது
எந்தன் வாசல் வந்து
எங்கும் ஈரமழை தூவுதே

பெண்: எந்த உறவு இது
எதுவும் புரியவில்லை
என்ற போதும் இது நீளுதே

ஆண்: யார் என்று அறியாமல்
பேர் கூட தெரியாமல்
இவளோடு ஒரு சொந்தம் உருவானதே

பெண்: ஏன் என்று கேட்காமல்
தடுத்தாலும் நிற்காமல்
இவன் போகும் வழி எங்கும்
மனம் போகுதே

ஆண்: பாதை முடிந்த பிறகும்
இந்த உலகில் பயணம் முடிவதில்லையே
பெண்: காற்றில் பறந்தே
பறவை மறைந்த பிறகும்

பெண் மற்றும் ஆண்: இலை தொடங்கும்
நடனம் முடிவதில்லையே
இது எதுவோ

ஆண்: தானா தோ தனானா
தானா தோ தனானா
தானா தோன் தனானா தானானேனானா

ஆண்: தானா தோ தனானா
தானா தோ தனானா
தானா தோன் தனானா தானானேனானா

பெண்: பூக்கள் பூக்கும் தருணம் ஆதவனை
பார்த்ததாரும் இல்லையே
உலரும் காலை பொழுதை
முழு மதியும் பிரிந்து போவதில்லையே

ஆண்: நேற்றுவரை நேரம் போகவில்லையே
உனது அருகே நேரம் போதவில்லையே
பெண்: எதுவும் பேசவில்லையே
இன்று ஏனோ எதுவும் தோன்றவில்லையே

ஆண் மற்றும் பெண்: என்ன புதுமை
இரவும் விடியவில்லையே
அது விடிந்தால் பகலும் முடியவில்லையே

ஆண்: அது எதுவோ

ஆண்: தானா தோ தனானா
தானா தோ தனானா
தானா தோன் தனானா தானானேனானா

ஆண்: தானா தோ தனானா
தானா தோ தனானா
தானா தோன் தனானா தானானேனானா