Mundhinam Parthene Lyrics in Tamil
ஆண்: ஹாய் மாலினி
ஐ எம் கிருஷ்ணன்
நான் இத சொல்லியே ஆகனும்
நீ அவ்வளவு அழகு
ஆண்: இங்க எவனும் இவ்வளோ அழகா ஒரு
இவ்ளோ அழக பாத்திருக்க மாட்டாங்க
அண்ட் ஐ எம் இன் லவ் வித் யூ
ஆண்: முன்தினம் பார்த்தேனே
பார்த்ததும் தோற்றேனே
சல்லடைக் கண்ணாக
நெஞ்சமும் புண்ணானதே
ஆண்: இத்தனை நாளாக
உன்னை நான் பாராமல்
எங்குதான் போனேனோ
நாட்களும் வீணானதே
ஆண்: வானத்தில் நீ வெண்ணிலா
ஏக்கத்தில் நான் தேய்வதா
ஆண்: இப்போதே என்னோடு
வந்தால் என்ன
ஊர் பார்க்க ஒன்றாக
சென்றால் என்ன
ஆண்: இப்போதே என்னோடு
வந்தால் என்ன
ஊர் பார்க்க ஒன்றாக
சென்றால் என்ன
ஆண்: முன்தினம் பார்த்தேனே
பார்த்ததும் தோற்றேனே
சல்லடைக் கண்ணாக
நெஞ்சமும் புண்ணானதே
ஆண்: இத்தனை நாளாக
உன்னை நான் பாராமல்
எங்குதான் போனேனோ
நாட்களும் வீணானதே
குழு: காதலே சுவாசமே
ஆண்: துலாத் தட்டில் உன்னை வைத்து
நிகர் செய்ய பொன்னை வைத்தால்
துலாபாரம் தோற்காதோ பேரழகே
பெண்: முகம் பார்த்து பேசும் உன்னை
முதல் காதல் சிந்தும் கண்ணை
அணைக்காமல் போவேனா ஆருயிரே
ஆண்: ஓ நிழல் போல விடாமல் உன்னை
தொடர்வேனடி
புகைப்போல படாமல் பட்டு
நகர்வேனடி
வினா நூறு கனாவும் நூறு
விடை சொல்லடி
பெண்: முன்தினம் பார்த்தேனே
பார்த்ததும் தோற்றேனே
சல்லடைக் கண்ணாக
உள்ளமும் புண்ணானதே
பெண்: இத்தனை நாளாக
ஆண்: ஓ மை லவ்
பெண்: உன்னை நான் பாராமல்
ஆண்: எஸ் மை லவ்
பெண்: எங்குதான் போனேனோ
நாட்களும் வீணானதே
பெண்: கடல் நீலம் மங்கும் நேரம்
அலைவந்து தீண்டும் தூரம்
மனம் சென்று மூழ்காதோ ஈரத்திலே
ஆண்: தலை சாய்க்க தோளும் தந்தாய்
விரல் கோர்த்து பக்கம் வந்தாய்
இதழ் மட்டும் இன்னும் ஏன் தூரத்திலே
பெண்: பகல் நேரம் கனாக்கள் கண்டேன்
உறங்காமலே
உயிர் இரண்டும் உராய்யக்கண்டேன்
நெருங்காமலே
உனையன்றி எனக்கு ஏது
எதிர்காலமே
ஆண்: முன்தினம் பார்த்தேனே
பார்த்ததும் தோற்றேனே
சல்லடைக் கண்ணாக
நெஞ்சமும் புண்ணானதே
ஆண்: இத்தனை நாளாக
உன்னை நான் பாராமல்
எங்குதான் போனேனோ
நாட்களும் வீணானதே
ஆண்: வானத்தில் நீ வெண்ணிலா
ஏக்கத்தில் நான் தேய்வதா
ஆண்: இப்போதே என்னோடு
வந்தால் என்ன
ஊர் பார்க்க ஒன்றாக
சென்றால் என்ன
ஆண்: இப்போதே என்னோடு
வந்தால் என்ன
ஊர் பார்க்க ஒன்றாக
சென்றால் என்ன
ஆண்: வெண்ணிலா
வெண்ணிலா வெண்ணிலா