Maya Nadhi Lyrics in Tamil
—பின்னணி இசை—
ஆண்: நெஞ்சம் எல்லாம்
வண்ணம் பல வண்ணம் ஆகுதே
கண்கள் எல்லாம்
இன்பம் கூடி கண்ணீா் ஆகுதே
பெண்: நான் உன்னை காணும் வரையில்
தாபத நிலையே
தேசங்கள் திரிந்தேன்
தனியே தனியே
ஆண்: ஆயிரம் கோடி முறை
நான் தினம் இறந்தேன்
நான் என்னை உயிர்த்தேன்
பிரிவில் பிரிவில்
ஆண்: மாய நதி இன்று
மார்பில் வழியுதே
தூய நரையிலும்
காதல் மலருதே
ஆண் குழு: மாய நதி இன்று
மார்பில் வழியுதே
தூய நரையிலும்
காதல் மலருதே
—பின்னணி இசை—
ஆண்: நீா் வழியே மீன்களைப் போல்
என் உறவை நான் இழந்தேன்
நீ இருந்தும் நீ இருந்தும்
ஒரு துறவை நான் அடைந்தேன்
ஆண்: ஒளி பூக்கும் இருளே
வாழ்வின் பொருளாகி
வலி தீா்க்கும் வலியாய்
வாஞ்சை தரவா
ஆண்: மாய நதி இன்று
மார்பில் வழியுதே
தூய நரையிலும்
காதல் மலருதே
ஆண்: யானை பலம் இங்கே
சேரும் உறவிலே
போன வழியிலே
வாழ்க்கைத் திரும்புதே
—பின்னணி இசை—
பெண்: தேசமெல்லாம் ஆளுகின்ற
ஒரு படையை நான் அடைந்தேன்
காலம் என்னும் வீரனிடம்
என் கொடியை நான் இழந்தேன்
பெண்: மணல் ஊரும் மழையாய்
மடிமீது விழ வா வா
அணை மீறும் புனலாய்
மார் சாய்ந்து அழ வா
ஆண் குழு: மாய நதி இன்று
மார்பில் வழியுதே
தூய நரையிலும்
காதல் மலருதே
பெண்: யானை பலம் இங்கே
சேரும் உறவிலே
போன வழியிலே
வாழ்க்கை திரும்புதே

