கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

Kandukondain Kandukondain Lyrics in Tamil
Movie: Kandukondain Kandukondain(கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்)
Music: A. R. Rahman
Singers: Hariharan and Mahalakshmi Iyer
Lyricist: Vairamuthu(வைரமுத்து)

Kandukondain Kandukondain Lyrics in Tamil

ஆண்: கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
காதல் முகம் கண்டுகொண்டேன்

ஆண்: கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
காதல் முகம் கண்டுகொண்டேன்
விரல் தொடும் தூரத்திலே
வெண்ணிலவு கண்டுகொண்டேன்

ஆண்: வெண்ணிலா வெளிச்சம்
கிண்ணத்தில் விழுந்து
நிறைந்தால் வழிந்தால் மகிழ்ச்சி

ஆண்: வெண்ணிலா வெளிச்சம்
கிண்ணத்தை உடைத்தால்
உயிரை உடைப்பாள் ஒருத்தி

பெண்: என் கண் பார்த்தது
என் கை சேருமோ
ஆண்: கை சேராமலே
கண்ணீர் சேருமோ

பெண்: கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
காதல் முகம் கண்டுகொண்டேன்

ஆண்: மலர்மஞ்சம் விழி கெஞ்சும்
மனம் அஞ்சுமல்லவா
பெண்: உயிர் மிஞ்சும் இவள் நெஞ்சம்
உன் தஞ்சமல்லவா

ஆண்: உன் தனிமைக் கதவின்
தாள் நீக்கவா

பெண்: கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
காதல் முகம் கண்டுகொண்டேன்

பெண்: மேகம் திறந்தால்
அதற்குள் உன் முகம் பார்க்கிறேன்
பூக்கள் திறந்தால்
அதற்குள் உன் குரல் கேட்கிறேன்

ஆண்: கண்களைத் திறந்தும்
கனவுகள் வளர்க்கும்
காதலின் விரல்கள்
கல்லையும் திறக்கும்

பெண்: உன்னைத் தேடியே
இனி எனது பயணமோ
எந்தன் சாலைகள்
உன் வீட்டில் முடியுமோ

ஆண்: ஏ கனவு மங்கையே
உனது மனது
எனது மனதில் இணையுமோ

பெண்: கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
காதல் முகம் கண்டுகொண்டேன்
ஆண்: விரல் தொடும் தூரத்திலே
வெண்ணிலவு கண்டுகொண்டேன்

ஆண்: நதியின் தேடல்
கடைசியில் கடல் காண்பது
உயிரின் தேடல்
கடைசியில் உனைக்காண்பது

பெண்: கடல் கொண்ட நதியோ
முகம் தனை இழக்கும்
நான் உன்னில் கலந்தால்
புது முகம் கிடைக்கும்

ஆண்: நட்சத்திரங்களை
ஒரு நாரில் கட்டுவேன்
எந்த நேரமும்
உன் கதவு தட்டுவேன்

பெண்: ஏ காதல் தேவனே
எனது இமையில்
உனது விழிகள் மூடுவேன்

ஆண்: கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
பெண்: கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
ஆண்: காதல் முகம் கண்டுகொண்டேன்
பெண்: காதல் முகம் கண்டுகொண்டேன்

ஆண்: விரல் தொடும் தூரத்திலே
பெண்: விரல் தொடும் தூரத்திலே
ஆண்: வெண்ணிலவு கண்டுகொண்டேன்

பெண்: கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
ஆண்: காதல் முகம் கண்டுகொண்டேன்