Ennavale Adi Ennavale Lyrics in Tamil
ஆண்: என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்
எந்த இடம் அது தொலைந்த இடம்
அந்த இடத்தையும் மறந்து விட்டேன்
ஆண்: உந்தன் கால் கொலுசில்
அது தொலைந்ததென்று
உந்தன் காலடி தேடி வந்தேன்
ஆண்: காதலென்றால் பெரும் அவஸ்தையென்று
உனைக் கண்டதும் கண்டு கொண்டேன்
எந்தன் கழுத்து வரை இன்று காதல் வந்து
இரு கண்விழி பிதுங்கி நின்றேன்
ஆண்: என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்
ஆண்: வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும்
இன்று வசப்படவில்லையடி
வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா
ஒரு உருண்டையும் உருலுதடி
ஆண்: காத்திருந்தால் எதிர் பார்த்திருந்தால்
ஒரு நிமிஷமும் வருஷமடி
கண்களெல்லாம் எனைப் பார்ப்பதுபோல்
ஒரு கலக்கமும் தோன்றுதடி
ஆண்: இது சொர்க்கமா நரகமா
சொல்லடி உள்ளபடி
நான் வாழ்வதும் விடைகொண்டு போவதும்
உன் வார்த்தையில் உள்ளதடி
ஆண்: என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்
ஆண்: கோகிலமே நீ குரல் கொடுத்தால்
உன்னை கும்பிட்டுக் கண்ணடிப்பேன்
கோபுரமே உன்னை சாய்த்துக்கொண்டு
உந்தன் கூந்தலில் மீன் பிடிப்பேன்
ஆண்: வெண்ணிலவே உன்னைத் தூங்கவைக்க
உந்தன் விரலுக்கு சொடுக்கெடுப்பேன்
வருடவரும் பூங்காற்றையெல்லாம்
கொஞ்சம் வடிகட்டி அனுப்பிவைப்பேன்
ஆண்: என் காதலின் தேவையை
காதுக்குள் ஓதிவைப்பேன்
உன் காலடி எழுதிய கோலங்கள்
புதுக் கவிதைகள் என்றுரைப்பேன்
ஆண்: என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்
எந்த இடம் அது தொலைந்த இடம்
அந்த இடத்தையும் மறந்து விட்டேன்
ஆண்: உந்தன் கால்கொலுசில்
அது தொலைந்ததென்று
உந்தன் காலடி தேடி வந்தேன்
ஆண்: காதலென்றால் பெரும் அவஸ்தையென்று
உனைக் கண்டதும் கண்டு கொண்டேன்
எந்தன் கழுத்து வரை இன்று காதல் வந்து
இரு கண்விழி பிதுங்கி நின்றேன்
ஆண்: என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்