Engeyum Kadhal Lyrics in Tamil
ஆண்: எங்கேயும் காதல்
விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச
வெண்காலை சாரல்
முகத்தினில் வந்து சட்டென்று மோத
ஆண்: பொல்லாத பாடல்
பரவசம் தந்து பாதத்தில் ஓட
முதல்வரும் காதல்
மண்ணில் முந்நுாறு ஆண்டு வாழும்
ஆண்: காதல் என்னும் தேனே
கடல் அலைகளில் காணும் நீலம் நீயே
வானே வண்ண மீனே
மழை வெயில் என நான்கு காலம் நீயே
ஆண்: கடற்கரையில் அதன் மணல் வெளியில்
அக்காற்றோடு காற்றாக
பலகுரல்கள் பல பல விரல்கள்
தமை பதிவு செய்திருக்கும்
ஆண்: விடியலிலும் நடு இரவினிலும்
இது ஓயாதே ஓயாதே
சிரிப்பினிலும் பல சினுங்களிலும்
மிக கலந்து காத்திருக்கும்
ஆண்: ஓ பார்க்காமல்
கொஞ்சம் பேசாமல் போனாலும்
உள்ளம் தாங்காதே தாங்காதே
கண்கள்தான் பின்பு தூங்காதே
ஆண்: எங்கேயும் காதல்
விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச
வெண்காலை சாரல்
முகத்தினில் வந்து சட்டென்று மோத
ஆண்: பொல்லாத பாடல்
பரவசம் தந்து பாதத்தில் ஓட
முதல் வரும் காதல்
மண்ணில் முந்நுாறு ஆண்டு வாழும்
ஆண்: அடம் பிடிக்கும் இது வடம் இழுக்கும்
யார் சொன்னாலும் கேட்காதே
தர மறுக்கும் பின் தலைகொடுக்கும்
இது புரண்டு தீர்த்திடுமே
ஆண்: முகங்களையோ உடல் நிறங்களையோ
இது பார்க்காதே பார்க்காதே
இரு உடலில் ஓர் உயிர் இருக்க
அது முயன்று பார்த்திடுமே
ஆண்: யார் யாரை எங்கே நேசிக்க நேர்ந்தாலும்
அங்கே பூந்தோட்டம் உண்டாகும்
பூசென்றாய் பூமி திண்டாடும்
ஆண்: எங்கேயும் காதல்
பெண்: விழிகளில் வந்து ஒவ்வொன்றும் பேச
ஆண்: வெண்காலை சாரல்
பெண்: முகத்தினில் வந்து சட்டென்று மோத
ஆண்: பொல்லாத பாடல்
பெண்: பரவசம் தந்து பாதத்தில் ஓட
ஆண்: முதல் வரும் காதல்
மண்ணில் முந்நுாறு ஆண்டு வாழும்
ஆண்: காதல் என்னும் தேனே
கடல் அலைகளில் காணும் நீலம் நீயே
வானே வண்ண மீனே
மழை வெயில் என நான்கு காலம் நீயே