En Uchimandai Lyrics in Tamil
ஆண்: என் உச்சி மண்டைல சுர்ருன்குது
உன்ன நான் பார்க்கையில கிர்ருன்குது
கிட்ட நீ வந்தாலே விர்ருன்குது டர்ருன்குது டர்
பெண்: என் உச்சி மண்டைல சுர்ருன்குது
உன்ன நான் பார்க்கையில கிர்ருன்குது
கிட்ட நீ வந்தாலே விர்ருன்குது டர்ருன்குது டர்
ஆண்: கை தொடும் தூரம் காய்ச்சவளே
சக்கரையாலே செஞ்சவளே
என் பசி தீர்க்க வந்தவளே சுந்தரியே
பெண்: தாவணி தாண்டி பார்த்தவனே
கண்ணாலே என்னை சாய்ச்சவனே
ராத்திரி தூக்கம் கெடுத்தவனே சந்திரனே
ஆண்: என் உச்சி மண்டைல சுர்ருன்குது
உன்ன நான் பார்க்கையில கிர்ருன்குது
கிட்ட நீ வந்தாலே விர்ருன்குது டர்ருன்குது
ஆண்: மியா மியா பூனை
நான் மீச வச்ச யானை
கள்ளு கட பான
நீ மயக்குற மச்சான
பெண்: வில்லு கட்டு மீச
என மேல பட்டு கூச
ஆட்டு குட்டி ஆச
உன் கிட்ட வந்து பேச
ஆண்: மந்திரக்காரி மாய மந்திரக்காரி
காகிதமா நீ இருந்தா
பேனா போல நான் இருப்பேன்
ஓவியமா உன் உருவம் வரைஞ்சிடுவேனே
பெண்: உள்ளங்கையா நீ இருந்தா
ரேகையாக நான் இருப்பேன்
ஆயுளுக்கும் உன் கூட இணைஞ்சிருப்பேனே
ஆண்: என் உச்சி மண்டைல சுர்ர்ர்
உன்ன நான் பார்க்கையில கிர்ர்ர்
கிட்ட நீ வந்தாலே விர்ர்ர் டர்ர்ர்
பெண்: அஞ்சு மணி பஸ்சு
நான் அதவிட்டா மிஸ்சு
ஒரே ஒரு கிஸ்சு
நீ ஒத்துகிட்டா எஸ்சு
ஆண்: கம்மங்கரை காடு
நீ சுட்டா கருவாடு
பந்திய நீ போடு
நான் வரேன் பசியோடு
பெண்: மந்திரக்காரா மாய மந்திரக்காரா
ஹே அப்பாவியா மூஞ்ச வச்சு
அங்க இங்க கைய வச்சு
நீயும் என்ன பிச்சு தின்ன கேக்குறியேடா
ஆண்: துப்பாக்கியா மூக்க வச்சு
தோட்ட போல மூச்ச வச்சு
நீயும் என்னை சுட்டு தள்ள பாக்குறியேடி
ஆண்: என் உச்சி மண்டைல சுர்ருன்குது
உன்ன நான் பார்க்கையில கிர்ருன்குது
கிட்ட நீ வந்தாலே விர்ருன்குது டர்ருன்குது
பெண்: என் உச்சி மண்டைல சுர்ருன்குது
உன்ன நான் பார்க்கையில கிர்ருன்குது
கிட்ட நீ வந்தாலே விர்ருன்குது டிர்ருன்குது டர்ருன்குது
ஆண்: கை தொடும் தூரம் காய்ச்சவளே
சக்கரையாலே செஞ்சவளே
என் பசி தீர்க்க வந்தவளே சுந்தரியே
பெண்: தாவணி தாண்டி பார்த்தவனே
கண்ணாலே என்னை சாய்ச்சவனே
ராத்திரி தூக்கம் கெடுத்தவனே சந்திரனே
ஆண்: என் உச்சி மண்டைல சுர்ர்ர் சுர்ருங்குது
உன்ன நான் பார்க்கையிலே கிர்ர்ர் கிர்ருன்குது
கிட்ட நீ வந்தாலே டர்