Chinna Thamarai Lyrics in Tamil
ஆண்: ஒரு சின்ன தாமரை
என் கண்ணில் பூத்ததே
அதன் மின்னல் வார்த்தைகள்
என் உள்ளம் தேடி தைக்கின்றதே
ஆண்: இதை உண்மை என்பதா
இல்லை பொய்தான் என்பதா
என் தேகம் முழுவதும்
ஒரு விண்மீன் கூட்டம் மொய்க்கின்றதே
பெண்: என் ரோம கால்களோ
ஒரு பயணம் போகுதே
உன் ஈர புன்னகை சுடுதே
பெண்: என் காட்டுப் பாதையில்
நீ ஒற்றை பூவடா
உன் வாசம் தாக்கியே
மலர்ந்தேன் உயிரே
ஆண்: ஒரு சின்ன தாமரை
என் கண்ணில் பூத்ததே
அதன் மின்னல் வார்த்தைகள்
என் உள்ளம் தேடி தைக்கின்றதே
ஆண்: உன் பெயர் கேட்டாலே
அடி பாறையில் பூ பூக்கும்
உன் காலடி தீண்டிய
வார்த்தைகள் எல்லாம்
கவிதைகளாய் மாறும்
பெண்: உன் தெரு பார்த்தாலே
என் கண்கள் அலை மோதும்
உன் வாசல் தேடி
போக சொல்லி கெஞ்சுது என் பாதம்
ஆண்: என் வாழ்க்கை வரலாற்றில்
எல்லாமே உன் பக்கங்கள்
பெண்: உன்னாலேஎன் வீட்டின்
சுவர் எல்லாம் ஜன்னல்கள்
ஆண்: ஒரு சின்ன தாமரை
என் கண்ணில் பூத்ததே
அதன் மின்னல் வார்த்தைகள்
என் உள்ளம் தேடி தைக்கின்றதே
ஆண்: உன் குரல் கேட்டாலே
அந்த குயில்களுக்கும் கூசும்
நீ மூச்சினில் சுவாசித்த
காற்றுகள் மட்டும்
மோட்சத்திலே சேரும்
பெண்: அனுமதி கேட்காமல்
உன் கண்கள் என்னை மேயும்
நான் இத்தனை நாளாய்
எழுப்பிய கோபுரம்
நொடியில் குடைசாயும்
ஆண்: உன் கைகள் கோர்க்காமல்
பயணங்கள் கிடையாது
பெண்: உன்னோடு வந்தாலே
சாலைகள் முடியாது
ஆண்: ஒரு சின்ன தாமரை
என் கண்ணில் பூத்ததே
அதன் மின்னல் வார்த்தைகள்
என் உள்ளம் தேடி தைக்கின்றதே
ஆண்: இதை உண்மை என்பதா
இல்லை பொய்தான் என்பதா
என் தேகம் முழுவதும்
ஒரு விண்மீன் கூட்டம் மொய்க்கின்றதே
பெண்: என் ரோம கால்களோ
ஒரு பயணம் போகுதே
உன் ஈர புன்னகை சுடுதே
பெண்: என் காட்டுப் பாதையில்
நீ ஒற்றை பூவடா
உன் வாசம் தாக்கியே
மலர்ந்தேன் உயிரே
ஆண்: ஒரு சின்ன தாமரை
என் கண்ணில் பூத்ததே
அதன் மின்னல் வார்த்தைகள்
என் உள்ளம் தேடி தைக்கின்றதே