Asku Laska Lyrics in Tamil
பெண்: ஏனோ தன்னாலே உன்மேலே
காதல் கொண்டேனே
ஏதோ உன்னாலே என் வாழ்வில்
அர்த்தம் கண்டேனே
பெண் குழு: அஸ்கு அஸ்கு அஸ்கு
லஸ்கா அஸ்கு
அஸ்கு அஸ்கு அஸ்கு லஸ்கா அஸ்கு
ஆண்: ஆ அஸ்கு லஸ்கா ஏமோ ஏமோ
ஐ அஸ்த் அஸ்த் லிபே
ஆஹாவ போலிங்கோ சிந்தா சிந்தா
இஷ்க் இஷ்க் மீலே
லவ் இஷ்டம் பிரேமம் பியாரோ பியாரோ
ஒரு காதல் உந்தன் மேலே
பெண் குழு: அஸ்கு அஸ்கு அஸ்கு
லஸ்கா அஸ்கு அஸ்கு
ஆண்: அத்தனை மொழியிலும்
வார்த்தை ஒவ்வொன்று கொய்தேன்
மொத்தமாய் கோர்த்துதான்
காதல் சென்டொன்று செய்தேன்
உன்னிடம் நீட்டினேன் காதலை காட்டினேன்
ஆண்: ஏனோ தன்னாலே உன்மேலே
காதல் கொண்டேனே
ஏதோ உன்னாலே என் வாழ்வில்
அர்த்தம் கண்டேனே
ஆண்: ஆ அஸ்கு லஸ்கா ஏமோ ஏமோ
ஐ அஸ்த் அஸ்த் லிபே
ஆஹாவ போலிங்கோ சிந்தா சிந்தா
இஷ்க் இஷ்க் மீலே
லவ் இஷ்டம் பிரேமம் பியாரோ பியாரோ
ஒரு காதல் உந்தன் மேலே
ஆண்: ப்ளுடோவில் உன்னை நான்
கூடேற்றுவேன்
விண்மீன்கள் பொறுக்கி
சூடேற்றுவேன்
ஆண்: முக்கோணங்கள் படிப்பேன்
உன் மூக்கின் மேலே
விட்டம் மட்டம் படிப்பேன்
உன் நெஞ்சின் மேலே
மெல்லிடையோடு வளைகோடு
நான் ஆகிறேன் ஓ ஓ ஹோ
பெண்: ப்ளாடோவின் மகனாய்
உன் வேடமா
ஆராய்ச்சி நடத்த நான் கூடமா
பெண்: பாழும் நோயில் விழுந்தாய்
உன் கண்ணில் கண்டேன்
நாளும் உண்ணும் மருந்தாய்
என் முத்தம் தந்தேன்
உன் நெஞ்சில் நாடி மணி வைக்க
காதல் காதல் என்றே கேட்க
பெண்: அஸ்கு லஸ்கா ஏமோ ஏமோ
ஐ அஸ்த் அஸ்த் லிபே
ஆஹாவ போலிங்கோ சிந்தா சிந்தா
இஷ்க் இஷ்க் மீலே
ஆண்: லவ் இஷ்டம் பிரேமம் பியாரோ பியாரோ
ஒரு காதல் உந்தன் மேலே
பெண் குழு: அஸ்கு அஸ்கு அஸ்கு
லஸ்கா அஸ்கு அஸ்கு ஆ ஆ ஆ
அஸ்கு அஸ்கு அஸ்கு
லஸ்கா அஸ்கு அஸ்கு ஆ ஆ
அஸ்கு அஸ்கு அஸ்கு
லஸ்கா அஸ்கு அஸ்கு
பெண்: தேஜாவூ கனவில்
தீ மூட்டினாய்
ராஜா என் மனதை
ஏன் வாட்டினாய்
பெண்: கப்பம் கேட்டு மிரட்டி
நீ வெப்பம் கொண்டாய்
ரத்தம் மொத்தம் கொதிக்க
என் பக்கம் வந்தாய்
வென் நிலாவாக இதமாக குளிரூட்டவா
ஆண்: கண்ணாடி நிலவாய்
கண் கூசினாய்
வெண்வண்ண நிழலை
மண் வீசினாய்
ஆண்: புல்லில் பூத்த பனி நீ
ஒரு கள்ளம் இல்லை
வைரஸ் இல்லா கணினி
உன் உள்ளம் வெள்ளை
நீ கொல்லை மல்லி முல்லை போலே
பிள்ளை மெல்லும் சொல்லை போலே
ஆண்: அஸ்கு லஸ்கா ஏமோ ஏமோ
அஸ்கு லஸ்கா ஏமோ ஏமோ
ஐ அஸ்த் அஸ்த் லிபே
பெண்: ஆஹாவ போலிங்கோ சிந்தா சிந்தா
இஷ்க் இஷ்க் மீலே
ஆண்: லவ் இஷ்டம் பிரேமம் பியாரோ பியாரோ
ஒரு காதல் உந்தன் மேலே
பெண்: ஓ அத்தனை மொழியிலும்
வார்த்தை ஒவ்வொன்று கொய்தேன்
ஆண்: மொத்தமாய் கோர்த்துதான்
காதல் சென்டொன்று செய்தேன்
ஆண் மற்றும் பெண்: உன்னிடம் நீட்டினேன்
காதலை காட்டினேன்
ஆண்: ஏனோ தன்னாலே உன்மேலே
காதல் கொண்டேனே
ஏதோ உன்னாலே என் வாழ்வில்
அர்த்தம் கண்டேனே