ஏறு மயிலேறி

Yaerumayileri Song Lyrics in Tamil
Movie: Sardar(சர்தார்)
Music: G. V. Prakash Kumar
Singer: Karthi
Lyricist: Yugabharathi

Yaerumayileri Song Lyrics in Tamil

ஆண்: குன்றான குன்றத்திலே
குமரன் அவன் குடி இருக்கா
கோடாங்கி பாட்டு எடுத்தா
கேக்குதடி அரோகரா அரோகரா அரோகரா

ஆண்: கும்முனா கும்மிருட்டு கொஞ்சுனா ஜல்லிக்கட்டு
வள்ளி உன் குறும்பழகு டமுக்கு டிய்யாலோ
வாரமா வந்தே நிப்பேன் டிமுக்கு டுப்பாலோ

ஆண்: அள்ளுன அள்ளிகிட்டு ஆசைய மல்லுகட்டு
வள்ளி உன் கணுக்காலு டமுக்கு டப்பாலோ
வண்ணாத்தி பாறையெல்லாம் வழுக்கி நிக்காலோ

ஆண்: ஒட்டு மாங்கனி போல
ஒயிலான ஓம் மூக்கு
முட்டியே கொட சாஞ்சா
அதுதானே என் சோக்கு

ஆண்: பொட்டழகு வள்ளியம்மா
போடணுமே நெத்திச்சுட்டி
கிட்ட வந்து அள்ளிகிட்டா
கட்டிக்குவேன் தாலி கட்டி

ஆண்: ஏறு மயிலேறி விளையாடி வருவேனே
எட்டும் வினை தீர்த்தே
உனை ஏந்தி கொள்வேன் நானே

ஆண்: ஆறுமுக சாமி அருளாசி தருவேனே
சிந்தும் தமிழ் கேட்டே
மழை பெய்யும் உச்சி வானே

ஆண்: ஈசனே உனக்கப்பன் என்றாலும் கூட
இன்பமே உனை வேண்ட
அண்டாதே சோகம்

ஆண்: நீ பிஞ்சிலே பழுத்தேன்னு சொன்னாலும் கூட
நெஞ்சமே உனை வேண்ட
கூடும் சந்தோஷம்

ஆண்: ஔவையென் வாயூர
வரும் சொல்லே வடிவேலே
உன்னை யாம் புகழ்ந்தாலே
தினந்தோறும் திருநாளே

ஆண்: ஏறு மயில் ஏறி விளையாடி வருவேனே
எட்டும் வினை தீர்த்தே
உனை ஏந்தி கொள்வேன் நானே

ஆண்: ஆறுமுக சாமி அருளாசி தருவேனே
சிந்தும் தமிழ் கேட்டே
மழை பெய்யும் உச்சி வானே

ஆண்: கடிவாளம் எனக்கேதும் கிடையாதப்பா
கடல் தாண்டி மாலை தாண்டி ஜெயிப்பேனப்பா
கொடி காக்க குலம் காக்க பிறந்தேனப்பா
பகையோரை பொலி போட எழுந்தேனப்பா

ஆண்: குடிநீருள்ளும் இருப்பேனப்பா
உழுவோர் நெஞ்சை உணர்வேனப்பா
முதலேதப்பா முடிவேதப்பா
அழுவோர் கண்ணை துடைப்பேனப்பா

ஆண்: ஏறு மயிலேறி விளையாடி வருவேனே
எட்டும் வினை தீர்த்தே
உனை ஏந்தி கொள்வேன் நானே

ஆண்: ஆறுமுக சாமி அருளாசி தருவேனே
சிந்தும் தமிழ் கேட்டே
மழை பெய்யும் உச்சி வானே