யாரோ இவன்

Yaaro Ivan Lyrics in Tamil
Movie: Udhayam NH4(றெக்க)
Music: GV Prakash Kumar
Singers: G. V. Prakash Kumar and Saindhavi
Lyricist: Na. Muthukumar(நா.முத்துக்குமார்)

Yaaro Ivan Lyrics in Tamil

பெண்: யாரோ இவன் யாரோ இவன்
என் பூக்களின் வேரோ இவன்
என் பெண்மையை வென்றான் இவன்
அன்பானவன்

ஆண்: உன் காதலில் கரைகின்றவன்
உன் பாா்வையில் உறைகின்றவன்
உன் பாதையில் நிழலாகவே வருகின்றவன்

பெண்: என் கோடையில் மழையானவன்
என் வாடையில் வெயிலானவன்
கண் ஜாடையில் என் தேவையை அறிவான் இவன்

ஆண்: எங்கே உன்னை கூட்டிச்செல்ல
சொல்வாய் எந்தன் காதில் மெல்ல
பெண்: என் பெண்மையும் இளைப்பாறவே
உன் மாா்பிலே இடம் போதுமே

ஆண்: ஏன் இன்று இடைவெளி குறைகிறதே
பெண்: மெதுவாக இதயங்கள் இணைகிறதே
ஆண்: உன் கைவிரல் என் கைவிரல் கேட்கின்றதே

பெண்: யாரோ இவன் யாரோ இவன்
என் பூக்களின் வேரோ இவன்
என் பெண்மையை வென்றான் இவன்
அன்பானவன்

பெண்: உன் சுவாசங்கள் எனைத் தீண்டினால்
என் நாணங்கள் ஏன் தோற்குதோ
ஆண்: உன் வாசனை வரும் வேளையில்
என் யோசனை ஏன் மாறுதோ

பெண்: நதியினில் ஒரு இலை விழுகிறதே
ஆண்: அலைகளில் மிதந்தது தவழ்கிறதே
பெண்: கரைசேருமா உன் கைசேருமா எதிா்காலமே

பெண்: எனக்காகவே பிறந்தான் இவன்
எனை காக்கவே வருவான் இவன்
என் பெண்மையை வென்றான் இவன்
அன்பானவன்

பெண்: என் கோடையில் மழையானவன்
என் வாடையில் வெயிலானவன்
கண் ஜாடையில் என் தேவையை அறிவான் இவன்

Other Songs From Udhayam NH4