வேப்பில்லை வேப்பில்லை

Veppilai Veppilai Lyrics in Tamil

Veppilai Veppilai Lyrics in Tamil

பெண்: வேப்பில்லை வேப்பில்லை
வெக்காளியம்மன் வேப்பில்லை

பெண்: வேப்பில்லை வேப்பில்லை
பண்ணாரியம்மன் வேப்பில்லை

பெண்: கத்திப்போல் வேப்பில்லை
காளியம்மன் வேப்பில்லை
ஈட்டிபோல் வேப்பில்லை
ஈஸ்வரியின் வேப்பில்லை

பெண்: கத்திப்போல் வேப்பில்லை
காளியம்மன் வேப்பில்லை
ஈட்டிபோல் வேப்பில்லை
ஈஸ்வரியின் வேப்பில்லை

பெண்: ஆயி மகாமாயீ
வடிவான வேப்பில்லை
நீலி திரிசூலி
உருவான வேப்பில்லை

பெண்: வேப்பில்லை வேப்பில்லை
வெக்காளியம்மன் வேப்பில்லை
வேப்பில்லை வேப்பில்லை
பண்ணாரியம்மன் வேப்பில்லை

பெண் குழு: ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம்

பெண்: வேம்பு ரதமேறி நீ
வித்தகியே வாருமம்மா
பாம்பு ரதமேறி நீ
பத்தினியே வாருமம்மா

பெண்: முத்து ரதமேறி நீ
முத்தாலம்மா வாருமம்மா
தங்க ரதமேறி நீ
தாயாரே வாருமம்மா

பெண்: வேக்காட்டில் பூற்றிருக்கும்
நாக ரத்தினமே
பாங்காட்டில் வீற்றிருக்கும்
கால கற்பகமே

பெண்: உடுக்கையிலே ஒலிக்குதடி
வேத மந்திரமே
பார்க்கையிலே தெரியுதடி
கோடி அற்புதமே

பெண் குழு: ஆயி மகாமாயீ
வடிவான வேப்பில்லை
நீலி திரிசூலி
உருவான வேப்பில்லை

பெண்: வேப்பில்லை வேப்பில்லை
வெக்காளியம்மன் வேப்பில்லை
வேப்பில்லை வேப்பில்லை
பண்ணாரியம்மன் வேப்பில்லை

பெண் குழு: வேப்பில்லை வேப்பில்லை

பெண்: நாகம் போல் ஆடி
நவகாளியே வாருமம்மா
அம்பை சத்தம் கேட்டு
பார்வதியே வாருமம்மா

பெண்: சாம்பிராணி வாசகியே
சடுதியிலே வாருமம்மா
சமயபுர மாரி சங்கரியே வாருமம்மா

பெண்: ஆயிரம் கண் பார்த்திருப்பால்
ராஜகாளிதான்
அண்டமெல்லாம் காத்திருப்பால்
வீரகாளிதான்

பெண்: வேப்பிலையில் குடியிருப்பால்
வேத வள்ளிதான்
வேண்டும் வரம் தந்திடுவாள்
ஞான வள்ளிதான்

பெண் குழு: ஆயி மகாமாயீ
வடிவான வேப்பில்லை
நீலி திரிசூலி
உருவான வேப்பில்லை

பெண்: வேப்பில்லை வேப்பில்லை
வெக்காளியம்மன் வேப்பில்லை
வேப்பில்லை வேப்பில்லை
பண்ணாரியம்மன் வேப்பில்லை

பெண் குழு: கத்திப்போல் வேப்பில்லை
காளியம்மன் வேப்பில்லை
ஈட்டிபோல் வேப்பில்லை
ஈஸ்வரியின் வேப்பில்லை

பெண்: ஆயி மகாமாயீ
வடிவான வேப்பில்லை
நீலி திரிசூலி
உருவான வேப்பில்லை

பெண் குழு: ஆயி மகாமாயீ
வடிவான வேப்பில்லை
நீலி திரிசூலி
உருவான வேப்பில்லை

Other Songs From Album

Lyrics Added by Padalvarigal Team