பாளையத்தம்மா நீ பாச விளக்கு

Palayathamma Nee Paasa Vilakku Lyrics in Tamil

Palayathamma Nee Paasa Vilakku Lyrics in Tamil

பெண் குழு: அம்பா சாம்பவி சந்திரமோலி
ராகலாமந்தரா உமா பார்வதி காளி
கைபவதி சிவாதிநைந்த காத்யாயனி பைரவி

—பின்னணி இசை—

பெண் குழு: மாவிளக்கு பூ விளக்கு
மாரியம்மன் மணிவிளக்கு
மண்விளக்கு பொன் விளக்கு
வாழைப்பூ திருவிளக்கு

—பின்னணி இசை—

பெண் குழு: நெய் விளக்கு கைவிளக்கு
கார்த்திகையின் அகல்விளக்கு
எலுமிச்சம்பழ விளக்கு
ஏத்தினோமே திருவிளக்கு

—பின்னணி இசை—

பெண்: பாளையத்தம்மா நீ பாச விளக்கு
உன் பார்வையிலே தெரியுதடி கோடி விளக்கு
பாளையத்தம்மா நீ பாச விளக்கு
உன் பார்வையிலே தெரியுதடி கோடி விளக்கு

பெண்: தாயிடத்தில் வைக்க வந்தேன் அன்பு வழக்கு
என் தாயிடத்தில் வைக்க வந்தேன் அன்பு வழக்கு
அது தீராமல் உதிக்காது அந்த கிழக்கு

பெண் குழு: பாளையத்தம்மா நீ பாச விளக்கு
உன் பார்வையிலே தெரியுதடி கோடி விளக்கு

—பின்னணி இசை—

பெண்: பக்தருக்கு முக்தி விளக்கு
சமபுரத்து சக்தி விளக்கு
கற்பூர ஜோதி விளக்கு
கருமாரி சங்கு விளக்கு

பெண்: பாளயத்து தாய் துணையே
கலங்கரி விளக்கு
ஆலயம்மா எல்லையம்மா
நம்பிக்கை மன விளக்கு

பெண்: மான விளக்கு கூட விளக்கு
மகர விளக்கு பாவை விளக்கு

பெண்: மின்னல் விளக்கு வெள்ளி விளக்கு
மின்மினிக்குள் உள்ள விளக்கு
அத்தனை தீபங்களும் அம்மா நீ

பெண்: பாளையத்தம்மா நீ பாச விளக்கு
உன் பார்வையிலே தெரியுதடி கோடி விளக்கு

—பின்னணி இசை—

பெண் குழு: கைவிளக்கு திருவிளக்கு
மருவத்தூர் சுடர் விளக்கு
தும்பவிலக்கு குடவிளக்கு
திருவண்ணாமலை விளக்கு

—பின்னணி இசை—

பெண் குழு: குத்து விளக்கு மதுரை விளக்கு
பத்தினிகளின் கற்பு விளக்கு
திருவிளக்கு சரவிளக்கு
சீதா மணிவிளக்கு
அணையாத குலவிளக்கு
ஆத்தா கை மண விளக்கு தாயே

பெண்: மீனாட்சி ஞான விளக்கு
காமாட்சி கருணை விளக்கு
மூகாம்பாள் குடும்ப விளக்கு
தேனாண்டாள் குல விளக்கு

பெண்: கோபம் வந்தால் காளி கண்ணில்
எரியும் சிவப்பு விளக்கு
மனம் குளிர செஞ்சால்
செல்வம் உருக்கி காட்டும் பச்சை விளக்கு

பெண்: நில விளக்கு நடை விளக்கு
தூங்கா விளக்கு பொங்க விளக்கு

—பின்னணி இசை—

பெண்: நிலா விளக்கு தள்ள விளக்கு
லட்சுமி விளக்கு நந்த விளக்கு
அத்தனை தீபங்களும் அம்மா நீ

பெண்: பாளையத்தம்மா நீ பாச விளக்கு
உன் பார்வையிலே தெரியுதடி கோடி விளக்கு
பாளையத்தம்மா நீ பாச விளக்கு
உன் பார்வையிலே தெரியுதடி கோடி விளக்கு

பெண்: தாயிடத்தில் வைக்க வந்தேன் அன்பு வழக்கு
என் தாயிடத்தில் வைக்க வந்தேன் அன்பு வழக்கு
அது தீராமல் உதிக்காது அந்த கிழக்கு

பெண்: பாளையத்தம்மா நீ பாச விளக்கு
உன் பார்வையிலே தெரியுதடி கோடி விளக்கு

பெண்: அன்ன விளக்கு சொர்ண விளக்கு
ஆத்தா கைராசி விளக்கு
உள்ளம் உனது பக்தி விளக்கு
உருகுதே என் உயிர் விளக்கு

பெண்: உலகத்துக்கு ஒரு விளக்கு
ஓம் சக்தி அருள் விளக்கு

Youtube video

Other Songs From Album

Lyrics Added by Padalvarigal Team