Veera Raja Veera Song Lyrics in Tamil
ஆண்கள்: காணீரோ நீர் காண்
சோழ வெற்றி வாள் ஒன்றைக் காணீரோ
ஓ அழகிய பூவே செல்லடியோ
மலரிடு போ சகி
ஆண் மற்றும் பெண்கள்: வீரா ராஜ வீர
சூரா தீர சூர
வீழா சோழ வீர
சீரார் ஞாலம் வாழ
வாராய் வாகை சூட
ஆண் மற்றும் பெண்கள்: தொடுவோர் பகைப்போரை
நடுகல் சேர்க்கும் வீர
மாறா காதல் மாற
பூவோர் ஏங்கும் தீர
பாவோர் போற்றும் வீர
ஆண் மற்றும் பெண்கள்: உடைவாள் அதைத் தாங்க
பருதோல் புவி தாங்க
வளமாய் எமை ஆழ
வருவாய் தனம் ஏற
ஆயிரம் வேளம் போல
போர்க்களம் சேரும் சோழ
ஆண் மற்றும் பெண்கள்: வேந்தா ராஜ ராஜ
வாராய் வாகை சூட
வீரா ராஜ வீர
சூரா தீர சூர
பெண்கள்: விறலியர் கானம் பாட
கணிகையர் நடனம் ஆட
பாவையர் குலவை போட
பரிதியர் சகடம் ஆட
பெண்கள்: அலைமேல் கதிரைப் போல
விளங்கிடும் மரும தேவ
பழையணி பெருமை சாற்ற
புலவர்கள் தமிழும் தீர
பெண்கள்: கடல் மேல் புயலைப் போல
களங்கள் விரைந்து பாய
வண்ணொலி சீராட்ட
தென்புலம் ஏங்கும் வீர
ஆண்: வீரா ராஜ வீர
சூரா தீர சூர
பெண்: விறலியர் கானம் பாட
கணிகையர் நடனம் ஆட
பாவையர் குலவை போட
பரிதியர் சகடம் ஆட
பெண்: அலைமேல் கதிரைப் போல
விளங்கிடும் மரும தேவ
பழையணி பெருமை சாற்ற
புலவர்கள் தமிழும் தீற
பெண்: கடல் மேல் புயலைப் போல
களங்கள் விரைந்து பாய
வண்ணொலி சீராட்ட
தென்புலம் ஏங்கும் வீர
ஆண்: வீரா ராஜ வீர
சூரா தீர சூர
பெண்கள்: ஊற்றாகிச் செல்
காற்றாகிச் செல்
ஆண் மற்றும் பெண்கள்: சர சர சர சரவெனவே
மழை தான் பெய்திட
பர பர பர பரவென
பாயட்டும் பாய்மரம்
பெண்கள்: மறவர்கள் வீரம் காண
சமுத்திரம் பெருகிப் போகும்
உருவிய வாளைக் கண்டு
பிறைமதி நாணிப் போகும்
ஆண் மற்றும் பெண்கள்: எதிரிகள் உதிரம் சேர்ந்து
குதிகளம் வண்ணம் மாறும்
உதிர்ந்திடும் பகைவர் தேகம்
கடலுக்கு அன்னமாகும்
ஆண் மற்றும் பெண்கள்: புலிமகன் வீரம் கண்டு
பகைப்புறம் சிதறி ஓடும்
சரமழை பெய்தல் கண்டு
கடலலை கரைத்து ஓடும்
ஆண் மற்றும் பெண்கள்: அடடா பெரும் வீரா
எடடா துடி வாளை
தொடடா சரமாலை
அடடா பகை ஓட
ஆண்கள்: வீரா ராஜ வீர
சூரா தீர சூர
வீழா சோழ வீர
சீரார் ஞாலம் வாழ
வாராய் வாகை சூட
பெண்கள்: தொடுவோர் பகைப்போரை
நடுகல் சேர்க்கும் வீர
மாறா காதல் மாற
பூவோர் ஏங்கும் தீர
பெண்கள்: ஆயிரம் வேளம் போல
போர்க்களம் சேரும் சோழ
ஆண் மற்றும் பெண்கள்: வேந்தா ராஜ ராஜ
வாராய் வாகை சூட
பெண்கள்: எம்தமிழ் வாழ்க வாழ்க
வீர சோழம் வாழ்க
நற்றமிழ் வாழ்க வாழ்க
நல்லோர் தேசம் வாழ்க
பெண்கள்: எம்தமிழ் வாழ்க வாழ்க
வீர சோழம் வாழ்க
நற்றமிழ் வாழ்க வாழ்க
நல்லோர் தேசம் வாழ்க
ஆண் மற்றும் பெண்கள்: எம்தமிழ் வாழ்க வாழ்க
வீர சோழம் வாழ்க
நற்றமிழ் வாழ்க வாழ்க
நல்லோர் தேசம் வாழ்க
ஆண்: வீரா