Uyire Uyire Lyrics in Tamil
ஆண்: உயிரே உயிரே
வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே
என்னை உன்னோடு கலந்துவிடு
ஆண்: நினைவே நினைவே
எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
நிலவே நிலவே
இந்த விண்ணோடு கலந்துவிடு
ஆண்: காதல் இருந்தால்
எந்தன் கண்ணோடு கலந்துவிடு
காலம் தடுத்தால்
என்னை மண்ணோடு கலந்துவிடு
ஆண்: உயிரே உயிரே
வந்து என்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே
எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
ஆண்: என் சுவாசக் காற்று
வரும்பாதை பார்த்து
உயிர்தாங்கி நான் இருப்பேன்
ஆண்: மலா்கொண்ட பெண்மை
வாராமல் போனால்
மலைமீது தீக்குளிப்பேன்
ஆண்: என் உயிர் போகும் போனாலும்
துயரில்லை கண்ணே
அதற்காகவா பாடினேன்
ஆண்: வரும் எதிர்காலம் உன் மீது
பழிபோடும் பெண்ணே
அதற்காகத்தான் வாடினேன்
ஆண்: முதலா முடிவா
அதை உன் கையில்
கொடுத்துவிட்டேன்
பெண்: உயிரே உயிரே
இன்று உன்னோடு கலந்துவிட்டேன்
உறவே உறவே
இன்று என் வாசல் கடந்துவிட்டேன்
பெண்: நினைவே நினைவே
உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்
கனவே கனவே
உந்தன் கண்ணோடு கறைந்துவிட்டேன்
ஆண்: காதல் இருந்தால்
எந்தன் கண்ணோடு கலந்துவிடு
காலம் தடுத்தால்
என்னை மண்ணோடு கலந்துவிடு
ஆண்: உயிரே உயிரே
வந்து என்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே
எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
பெண்: ஓா் பார்வை பார்த்தே
உயிர் தந்த பெண்மை
வாராமல் போய்விடுமா
பெண்: ஒரு கண்ணில் கொஞ்சம்
வலிவந்த போது
மறு கண்ணும் தூங்கிடுமா
பெண்: நான் கரும்பாறை பலதாண்டி
வேராக வந்தேன்
கண்ணாளன் முகம் பார்க்கவே
பெண்: என் கடுங்காவல் பலதாண்டி
காற்றாக வந்தேன்
கண்ணா உன் குரல் கேட்கவே
பெண்: அடடா அடடா
இன்று கண்ணீரும்
தித்திக்கின்றதே
ஆண்: உயிரே உயிரே
வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே
என்னை உன்னோடு கலந்துவிடு
ஆண்: நினைவே நினைவே
எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
நிலவே நிலவே
இந்த விண்ணோடு கலந்துவிடு
பெண்: மழைபோல் மழைபோல்
வந்து மண்ணோடு
விழுந்து விட்டேன்
பெண்: மனம்போல் மனம்போல்
உந்தன் ஊனோடு
உறைந்துவிட்டேன்
பெண்: உயிரே உயிரே
இன்று உன்னோடு கலந்துவிட்டேன்
நினைவே நினைவே
உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்