உனக்கு தான்

Movie: Chithha(சித்தா)
Music: Santhosh Narayanan
Singers: Santhosh Narayanan and Dhvani Kailas

Unakku Thaan Lyrics in Tamil – Vivek

ஆண்: அமுத கடல் உனக்குத்தான்
ஆறா மழை உனக்குத்தான்
நீங்கா நிழல் உனக்குத்தான்
நீ கண்மணி எனக்குத்தானே

ஆண்: பொருந்தி போ நீ தோளோடு
மடியில் ஊஞ்சல் ஆடு
என் பார்வை உன்னோடு
உன் பொம்மை கண்ணோடு
பேசாமல் விண்ணோடு
நாம் மிதந்து போவோம்

ஆண்: காதோரம் அடி ஆலோலம்
நான் தாங்க மாரோடு
வா விழுது தேனே வா

ஆண்: சந்திக்கா மலர் உனக்குத்தான்
கண்டிக்கா மொழி உனக்குத்தான்
சிந்திக்கா நொடி உனக்குத்தான்
சிரிக்கும் நதி உனக்கு தானே

ஆண்: வழியும் எச்சில் வாய் ஓரம்
எனது காயம் ஆறும்
என் தங்கம் முன்னாடி
என் கால கண்ணாடி
உன் ஆசை என்னாடி
நான் நடத்தி வைப்பேன்

ஆண்: வாழ்ந்தாலும்
தரை வீழ்ந்தாலும்
உன் கால்கள் என் நெஞ்சில்
வாழ வைத்தேனே

ஆண்: பத்து விரல் கோலம் போட
பூமி மேல முளைச்ச சித்திரமே
உன் அசைவ பாத்து பாத்து
ஆயுள் கூடும் எனக்கு

ஆண்: புன்னகையில் காலம் போக
தோகையாக சிரிச்ச பெட்டகமே
யாருக்கிங்கு யாரு காவல்
மாரி போச்சு கணக்கு

பெண்: என் கூட பேசுற போட்டோவ
உனக்கு நேரில காட்டட்டுமா
சின்னுக்கு பிடிச்ச எல்லா இனிப்பும்
சாப்பிட தரட்டுமா

ஆண்: அந்த அருவி போல்
அன்ப தருவாளே
சின்ன அறிவுப்பும்
இன்றி சுடுவாளே

ஆண்: நீயும் தும்மிடுடி தும்மிடுடி
ஆயுசு நூராக
என் உயிர் உன்னோட
பத்திர சொத்தாக

ஆண்: என் பார்வை உன்னோடு
உன் பொம்மை கண்ணோடு
பேசாமல் விண்ணோடு
நாம் மிதந்து போவோம்

ஆண்: காதோரம் அடி ஆலோலம்
நான் தாங்க மாரோடு
வா விழுது தேனே வா

Other Songs From Chithha Album