Thee Illai Lyrics in Tamil
ஆண்: தீ இல்லை புகை இல்லை
ஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே
நூல் இல்லை தறி இல்லை
ஒரு காதல் நெய்கிறாய் மனதிலே
ஆண்: பூவில்லை மடல் இல்லை
புது தேனைப் பெய்கிறாய் உயிரிலே
என்னை உன்னிடம் இழக்கிறேன்
இருந்தும் இல்லையாய் இருக்கிறேன்
ஆண்: முன்னும் பின்னும்
சின்னம் வைப்பேன்
சின்ன சின்னதாய்
ஆண்: ஓஹோ ஓஹோ ஓஹோ
விலையாய் தந்தேனே என்னை
ஓஹோ ஓஹோ ஓஹோ
வாங்கிக் கொண்டேனே உன்னை
ஓஹோ ஓஹோ ஓஹோ
ஆடை கொண்டதோ தென்னை
பெண்: வெகு நாளாய் கேட்டேன்
விழித் தூரல் போட்டாய்
உயிர் பயிர் பிழைத்தது உன்னாலே
பெண்: விலகாத கையைத் தொட்டு
விழி ஓர மையைத் தொட்டு
உயில் ஒன்று எழுதிடு உதட்டாலே
பெண்: இலக்கிய கனியை விழுங்கியது
விழுங்கிய நெஞ்சம் புழுங்கியது
இது ஒரு சாட்சி போதாதா
கண்கள் மோதாதா காதல் ஓதாதா
ஆண்: தீ இல்லை புகை இல்லை
ஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே
நூல் இல்லை தறி இல்லை
ஒரு காதல் நெய்கிறாய் மனதிலே
ஆண்: பூவில்லை மடல் இல்லை
புது தேனைப் பெய்கிறாய் உயிரிலே
என்னை உன்னிடம் இழக்கிறேன்
இருந்தும் இல்லையாய் இருக்கிறேன்
ஆண்: முன்னும் பின்னும்
சின்னம் வைப்பேன்
சின்ன சின்னதாய்
ஆண்: புனல் வேலே வீற்று
பனி வாடை காற்று
புனைந்தது நமக்கொரு புது பாட்டு
பெண்: கடற்கரை நாரைக் கூட்டம்
கரைந்திங்கு ஊரை கூட்டும்
இருவரும் நகர்வலம் வர பார்த்து
பெண்: சிலு சிலு என்று குளிரடிக்க
தொடு தொடு என்று தளிர் துடிக்க
எனக்கொரு பார்வை நீதானே
என்னை எடுப்பாயா உன்னுள் ஒளிப்பாயா
ஆண்: தீ இல்லை புகை இல்லை
ஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே
நூல் இல்லை தறி இல்லை
ஒரு காதல் நெய்கிறாய் மனதிலே
ஆண்: பூவில்லை மடல் இல்லை
புது தேனைப் பெய்கிறாய் உயிரிலே
என்னை உன்னிடம் இழக்கிறேன்
இருந்தும் இல்லையாய் இருக்கிறேன்
ஆண்: முன்னும் பின்னும்
சின்னம் வைப்பேன்
சின்ன சின்னதாய்
ஆண்: ஓஹோ ஓஹோ ஓஹோ
விலையாய் தந்தேனே என்னை
ஓஹோ ஓஹோ ஓஹோ
வாங்கிக் கொண்டேனே உன்னை
ஓஹோ ஓஹோ ஓஹோ
ஆடை கொண்டதோ தென்னை