The Life of Ram Lyrics in Tamil – Karthik Netha
ஆண்: கரை வந்த பிறகே
பிடிக்குது கடலை
நரை வந்த பிறகே
புரியுது உலகை
ஆண்: நேற்றின் இன்பங்கள் யாவும் கூடியே
இன்றை இப்போதே அர்த்தம் ஆக்குதே
இன்றின் இப்போதின் இன்பம் யாவுமே
நாளை ஓர் அர்த்தம் காட்டுமே
ஆண்: வாழா என் வாழ்வை வாழவே
தாளாமல் மேலே போகிறேன்
தீர உள் ஊற்றை தீண்டவே
இன்றே இங்கே மீள்கிறேன்
இங்கே இன்றே ஆள்கிறேன்
ஆண்: ஹே யாரோபோல்
நான் என்னை பார்க்கிறேன்
ஏதும் இல்லாமலே இயல்பாய்
சுடர் போல் தெளிவாய்
ஆண்: நானே இல்லாத
ஆழத்தில் நான் வாழ்கிறேன்
கண்ணாடியாய் பிறந்தே
காண்கின்ற எல்லாமும்
நான் ஆகிறேன்
ஆண்: இரு காலின் இடையிலே
உரசும் பூனையாய்
வாழ்க்கை போதும் அடடா
எதிர் காணும் யாவுமே
தீண்ட தூண்டும் அழகா
ஆண்: நானே நானாய் இருப்பேன்
நாளில் பூராய் வசிப்பேன்
போலே வாழ்ந்தே
சலிக்கும் வாழ்வை மறைக்கிறேன்
வாகாய் வாகாய் வாழ்கிறேன்
பாகாய் பாகாய் ஆகிறேன்
ஆண்: தோ காற்றோடு
வல்லூருதான் போகுதே
பாதை இல்லாமலே அழகாய்
நிகழே அதுவாய்
ஆண்: நீரின் ஆழத்தில்
போகின்ற கல் போலவே
ஓசை எல்லாம் துறந்தே
காண்கின்ற காட்சிக்குள்
நான் மூழ்கினேன்
ஆண்: திமிலேரி காளை மேல்
தூங்கும் காகமாய் பூமி மீது இருப்பேன்
புவி போகும் போக்கில் கை கோர்த்து
நானும் நடப்பேன்
ஆண்: ஏதோ ஏகம் எழுதே
ஆஹா ஆழம் தருதே
தாய் போல் வாழும் கணமே
ஆரோ பாடுதே
ஆண்: ஆரோ ஆரிராரிரோ
ஆரோ ஆரிராரிரோ
ஆண்: கரை வந்த பிறகே
பிடிக்குது கடலை
நரை வந்த பிறகே
புரியுது உலகை
ஆண்: நேற்றின் இன்பங்கள் யாவும் கூடியே
இன்றை இப்போதே அர்த்தம் ஆக்குதே
இன்றின் இப்போதின் இன்பம் யாவுமே
நாளை ஓர் அர்த்தம் காட்டுமே