Movie: Kanguva(கங்குவா)
Music: Devi Sri Prasad
Singers: Chorus
Lyricist: Madhan Karky(மதன்கார்க்கி)
Thalaivane Song Lyrics in Tamil
குழு: தலைவனே! எம் தலைவனே!!
தலைவனே!!
குழு: சூரா சூரா! படைநடை
சூரா சூரா! முடிவிலி
வீரத்தின் வேரா?
நீ ஒன்றல்ல நூறா?
குழு: வீரா வீரா! தடையுடை
வீரா வீரா! எமதின
மானத்தின் கூரா?
எம் உயிரின் சாறா??
குழு: போர் படைப்போர் யாரோ?
இந்தப் போரில் வெல்வோர் யாரோ?
போர் முடிப்போர் யாரோ?
அந்த எதிரியின் குருதியில் உன் பேரோ?
குழு: தலைவனே! எம் தலைவனே!!
தலைவனே!!
குழு: தலைவனே! எம் தலைவனே!!
தலைவனே!!
குழு: காடே காடே படையென
ஏதும் இல்லை தடையென
வென்றிடு வீரா!
பகை கொன்றிடு வீரா!
குழு: தீயே உந்தன் துணையென
நீயே உந்தன் இணையென
போரிடு வீரா
விண் ஏறிடு வீரா!
குழு: ஓ எதிரிகள் முன்னே
இந்த வனமே உந்தன் பின்னே
தீப்பிழம்பிரு கண்ணே
நீ எழுகையில் உயருது
தாய் மண்ணே!
குழு: தலைவனே! எம் தலைவனே!!
தலைவனே!!
குழு: தலைவனே! எம் தலைவனே!!
தலைவனே!!