தேன் தேன் தேன்

Thaen Thaen Thaen Lyrics in Tamil
Movie: Kuruvi(குருவி)
Music: Vidyasagar
Singers: Udit Narayan and Shreya Ghoshal
Lyricist: Yugabharathi(யுகபாரதி)

Thaen Thaen Thaen Lyrics in Tamil

பெண்: தேன் தேன் தேன்
உன்னைத் தேடி அலைந்தேன்
உயிர் தீயாய் அளந்தேன்
சிவந்தேன்

ஆண்: தேன் தேன் தேன்
என்னை நானும் மறந்தேன்
உன்னைக் காண பயந்தேன்
கரைந்தேன்

பெண்: என்னவோ சொல்ல துணிந்தேன்
ஏதேதோ செய்யத் துணிந்தேன்
உன்னோட சேரத்தானே நானும் மலர்ந்தேன்

பெண்: தேன் தேன் தேன்
உன்னைத் தேடி அலைந்தேன்
உயிர் தீயாய் அளந்தேன்
சிவந்தேன்

பெண்: அள்ளவரும் கையை ரசித்தேன்
ஆளவரும் கண்ணை ரசித்தேன்
அடங்காமல் தாவும் உந்தன்
அன்பை ரசித்தேன்

ஆண்: முட்ட வரும் பொய்யை ரசித்தேன்
மோத வரும் மெய்யை ரசித்தேன்
உறங்காமல் எங்கும் உந்தன்
உள்ளம் ரசித்தேன்

பெண்:நீ சொல்லும் சொல்லை ரசித்தேன்
இதழ் சொல்லாததையும் ரசித்தேன்
ஆண்: நீ செய்யும் யாவும் ரசித்தேன்
நிதம் செய்யாததையும் ரசித்தேன்
பெண்: உன்னாலேதானே நானும்
என்னை ரசித்தேன்

பெண்: தேன் தேன் தேன்
உன்னைத் தேடி அலைந்தேன்
உயிர் தீயாய் அளந்தேன்
சிவந்தேன்

ஆண்: சேலையில் நிலவை அறிந்தேன்
காலிலே சிறகை அறிந்தேன்
கனவிலே காதல் என்று
நேரில் அறிந்தேன்

பெண்: திருடனே உன்னை அறிந்தேன்
திருடினாய் என்னை அறிந்தேன்
இன்னும் நீ திருடத்தானே
ஆசை அறிந்தேன்

ஆண்: என் பக்கம் உன்னை அறிந்தேன்
பல சிக்கல் உன்னால் அறிந்தேன்
பெண்: நான் தென்றல் உன்னை அறிந்தேன்
அதில் கூசும் பெண்மை அறிந்தேன்
ஆண்: நீ நடமாடும் திராட்சைத் தோட்டம்
எதிரில் அறிந்தேன்

பெண்: தேன் தேன் தேன்
உன்னைத் தேடி அலைந்தேன்
உயிர் தீயாய் அளந்தேன்
சிவந்தேன்

ஆண்: ஏ தேன் தேன் தேன்
என்னை நானும் மறந்தேன்
உன்னைக் காண பயந்தேன்
கரைந்தேன்