தாம்தக்க தீம்தக்க

Thaamthakka Dheemthakka Lyrics in Tamil
Movie: Thirumalai(திருமலை)
Music: Vidyasagar
Singers: Tippu and Karthik
Lyricist: Na. Muthukumar(நா. முத்துக்குமார்)

Thaamthakka Dheemthakka Lyrics in Tamil

ஆண்: தாம்தக்க தீம்தக்க
தைய தக்க கூத்து
ஆண்: நீயில்ல நானில்ல
நாமுண்ணு மாத்து

ஆண்: தாம் தக்க தீம் தக்க
தைய தக்க கூத்து
நீயில்ல நானில்ல
நாமுண்ணு மாத்து

ஆண்: ஒண்ணு ரெண்டு மூணு
எண்ணுவதற்குள்ளே
ஓடி போகும் காலம் நிற்காதே

ஆண்: சுற்றி வரும் பூமி
சுற்றிவிடும் முன்னே
சூரியனை தொட்டுவிடலாம் அதாலே

ஆண்: தாம் தக்க தீம் தக்க
தைய தக்க கூத்து
நீயில்ல நானில்ல
நாமுண்ணு மாத்து

ஆண்: வானம் கிடுகிடுங்க
பூமி நடு நடுங்க
எழுந்து ஆடலாம் தோழா

ஆண்: தேகம் துடி துடிக்க
ரத்தம் அணல் அடிக்க
வெற்றி சூடலாம் வாடா

ஆண்: சகா காலை விழித்து
மாலை உறங்கும்
வாழ்கையை மறப்போம் வா

ஆண்: சகா நேற்று நாளை
கவலை மறந்து
இன்றை மட்டும் ரசிப்போம் வா

ஆண்: ஓ வானமா எல்லை
ஹே இல்லவே இல்லை
வானத்தையும் மீறி போவோம் வா அதாலே

ஆண்: தாம் தக்க தீம் தக்க
தைய தக்க கூத்து
நீயில்ல நானில்ல
நாமுண்ணு மாத்து

ஆண்: கமான்யோ கமான்யோ

ஆண்: தோளில் வலுவிருக்கு
நெஞ்சில் திறமிருக்கு
வேறு படை எதற்கு தோழா

ஆண்: உன்னை நீ எடுத்து
மின்னல் வாள் எடுத்து
விண்ணை கலக்கலாம் வாடா

ஆண்: சகா தாகம் எடுத்தால்
மேகம் பிழிந்து
தீர்த்தமாய் குடிப்போம் வா

ஆண்: சகா கோர்க துணிந்தால்
மழையின் நூலில்
நட்சத்திரம் கோர்போம் வா

ஆண்: ஓ வானமா எல்லை
ஹே இல்லவே இல்லை
வானத்தையும் மீறி போவோம் வா அதாலே

ஆண்: தாம் தக்க தீம் தக்க
தைய தக்க கூத்து
நீயில்ல நானில்ல நாமுண்ணு மாத்து

ஆண்: ஒண்ணு ரெண்டு மூணு
எண்ணுவதற்குள்ளே
ஓடி போகும் காலம் நிற்காதே

ஆண்: சுற்றி வரும் பூமி
சுற்றிவிடும் முன்னே
சூரியனை தொட்டுவிடலாம் அதாலே

ஆண்: கூத்தே கூத்தே கூத்தே கூத்தே கூத்தே