சுந்தரி கண்ணால்

Sundari Kannal Lyrics in Tamil
Movie: Thalapathi(தளபதி)
Music: Ilaiyaraaja
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Lyricist: Vaali(வாலி)

Sundari Kannal Lyrics in Tamil

ஆண்: சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இந்நாள் நல்ல தேதி
பெண்: என்னையே தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக

ஆண்: நான் உனை நீங்க மாட்டேன்
நீங்கினால் தூங்க மாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனே

ஆண்: சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இந்நாள் நல்ல தேதி
பெண்: என்னையே தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக

பெண்: வாய் மொழிந்த வார்த்தை யாவும்
காற்றில் போனால் நியாயமா
பாய் விரித்து பாவை பார்த்த
காதல் இன்பம் மாயமா

ஆண்: வாள் பிடித்து நின்றால் கூட
நெஞ்சில் உந்தன் ஊர்வலம்
போர்க்களத்தில் சாய்ந்தால் கூட
ஜீவன் உன்னை சேர்ந்திடும்

பெண்: தேனிலவு நான் வாழ
ஏன் இந்த சோதனை
ஆண்: வான் நிலவை நீ கேளு
கூறும் என் வேதனை

பெண்: என்னைத்தான் அன்பே மறந்தாயோ
ஆண்: மறப்பேன் என்றே நினைத்தாயோ

பெண்: என்னையே தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக
ஆண்: சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இந்நாள் நல்ல தேதி

பெண்: நான் உனை நீங்க மாட்டேன்
நீங்கினால் தூங்க மாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனே

ஆண்: சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இந்நாள் நல்ல தேதி
பெண்: என்னையே தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக

பெண்: சோலையிலும் முட்கள் தோன்றும்
நானும் நீயும் நீங்கினால்
பாலையிலும் பூக்கள் பூக்கும்
நான் உன் மார்பில் தூங்கினால்

ஆண்: மாதங்களும் வாரம் ஆகும்
நானும் நீயும் கூடினால்
வாரங்களும் மாதம் ஆகும்
பாதை மாறி ஓடினால்

பெண்: கோடி சுகம் வாராதோ
நீ எனை தீண்டினால்
ஆண்: காயங்களும் ஆறாதோ
நீ எதிர் தோன்றினால்

பெண்: உடனே வந்தால் உயிர் வாழும்
ஆண்: வருவேன் அந்நாள் வரக் கூடும்

ஆண்: சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இந்நாள் நல்ல தேதி
பெண்: என்னையே தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக

ஆண்: நான் உனை நீங்க மாட்டேன்
நீங்கினால் தூங்க மாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனே

ஆண்: சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இந்நாள் நல்ல தேதி
பெண்: என்னையே தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக