சிறகுகள் வந்தது

Siragugal Vanthathu Lyrics in Tamil
Music: Yuvan Shankar Raja
Singers: Javed Ali and Madhushree
Lyricist: Pa. Vijay(பா. விஜய்)

Siragugal Vanthathu Lyrics in Tamil – Pa. Vijay

ஆண்: சிறகுகள் வந்தது எங்கோ செல்ல
இரவுகள் தீர்ந்தது கண்ணில் மெல்ல
நினைவுகள் ஏங்குது உன்னைக் காணவே

ஆண்: கனவுகள் பொங்குது எதிலே அள்ள
வலிகளும் சேர்ந்தது உள்ளே கிள்ள
சுகங்களும் கூடுது உன்னைத் தேடியே

பெண்: உன்னை உன்னை தாண்டி செல்ல
கொஞ்ச காலம் கொஞ்ச தூரம்
கொஞ்ச நேரம் கூட என்னால் ஆகுமோ

பெண்: உன்னை உன்னை தேடி தானே
இந்த ஏக்கம் இந்த பாதை
இந்த பயணம் இந்த வாழ்க்கை ஆனதோ

ஆண்: கனவுகள் பொங்குது எதிலே அள்ள
வலிகளும் சேர்ந்தது உள்ளே கிள்ள
சுகங்களும் கூடுது உன்னைத் தேடியே

ஆண்: ஓ நதியே நீ எங்கே என்று
கரைகள் தேட கூடாதா
நிலவே நீ எங்கே என்று
முகில்கள் தேட கூடாதா

பெண்: ஓ மழை இரவினில் குயிலின் கீதம்
துடிப்பதை யார் அறிவார்
கடல் மடியினில் கிடக்கும் பலரின்
கனவுகள் யார் அறிவார்

ஆண்: அழகே நீ எங்கிருக்கிறாய்
வலித்தால் அன்பே நீ அங்கிருக்கிறாய்
உயிரே நீ என்ன செய்கிறாய்
உயிரின் உள்ளே வந்து செல்கிறாய்

பெண்: அன்பே எந்தன் நெஞ்சம் எங்கே
பூவின் உள்ளே நிலவின் மேலே
தீயின் கீழே காற்றின் வெளியே இல்லையே

பெண்: உந்தன் கண்ணில் உந்தன் மூச்சில்
உந்தன் இரவில் உந்தன் நெஞ்சில்
உந்தன் கையில் உந்தன் உயிரில் உள்ளதே

ஆண்: ஓ எனக்கே நான் சுமையாய் மாறி
என்னை சுமந்து வந்தேனே
உனக்கே நான் நிழலாய் மாறி
உன்னை தேடி வந்தேன்

பெண்: விழி நனைந்திடும் நேரம் பார்த்து
இமை விலகி விடாது
உயிர் துடித்திடும் முன்னே எந்தன்
உயிர் ஒதுக்கி விடாது

ஆண்: உலகம் ஒரு புள்ளியாகுதே
நெஞ்சம் எங்கோ மிதந்து போகுதே
உயிரில் ஒரு பூ வெடிக்குதே
சுகமோ வழியோ எல்லை மீறுதே

ஆண்: சிறகுகள் வந்தது எங்கோ செல்ல
இரவுகள் தீர்ந்தது கண்ணில் மெல்ல
நினைவுகள் ஏங்குது உன்னைக் காணவே

ஆண்: ஒரு இமை எங்கிலும் தேனில் மூழ்க
ஒரு இமை மாத்திரம் வலியில் நோக
இடையினில் எப்படி கனவும் காணுமோ

பெண்: உன்னை உன்னை தாண்டி செல்ல
கொஞ்ச காலம் கொஞ்ச தூரம்
கொஞ்ச நேரம் கூட என்னால் ஆகுமோ

பெண்: உன்னை உன்னை தேடி தானே
இந்த ஏக்கம் இந்த பாதை
இந்த பயணம் இந்த வாழ்க்கை ஆனதோ