Sha La La Lyrics in Tamil
பெண்: ஷா லா லா ஷா லா லா
ரெட்டை வால் வெண்ணிலா
என்னை போல் சுட்டி பெண்
இந்த பூமியிலா
பெண்: செ செ செ செவ்வந்தி
என் தோழி சாமந்தி
வெற்றிக்கு எப்போதும்
நான்தானே முந்தி
பெண்: கொட்டும் அருவி வி வி
என்னை தழுவி வி வி
அள்ளிக்கொள்ள ஆசை கள்வன்
இங்கே வருவானோ
பெண்: ஷா லா லா ஷா லா லா
ரெட்டை வால் வெண்ணிலா
என்னை போல் சுட்டி பெண்
இந்த பூமியிலா
பெண்: மரங்களே மரங்களே
ஒற்றை காலில் இருப்பதேன்
என்னவோ என்னவோ தவமா
பெண்: நதிகளே நதிகளே
சத்தம் போட்டு தான் நடப்பதேன்
கால்களின் விரல்களே கொலுசா
பெண்: பாரதி போல தலைப்பாகை
கட்டியதே தீக்குச்சி
நெருப்பில்லாமல் புகை வருதே
அதிசயமான நீர்வீழ்ச்சி
பெண்: இடையை ஆட்டி
நடையை ஆட்டி
ஓடும் ரயிலே சொல்
நாட்டியமா ஹேய் நாட்டியமா
பெண்: தாய் முகம் பார்த்த நாள்
தாவணி போட்ட நாள்
மறக்குமா மறக்குமா நெஞ்சே
பெண்: மழைத்துளி ரசித்ததும்
பனித்துளி ருசித்ததும்
கரையுமா கரையுமா கண்ணில்
பெண்: ஹைதர் கால வீரன்தான்
குதிரை ஏறி வருவானோ
காவல் தாண்டி என்னை தான்
கடத்திக்கொண்டு போவானோ
பெண்: கண்ணுக்குள் முதல்
நெஞ்சுக்குள் வரை
ஆசை சேமிக்கிறேன்
யாரவனோ யாரவனோ
பெண்: ஷா லா லா ஷா லா லா
ரெட்டை வால் வெண்ணிலா
என்னை போல் சுட்டி பெண்
இந்த பூமியிலா
பெண்: கொட்டும் அருவி வி வி
என்னை தழுவி வி வி
அள்ளிக்கொள்ள ஆசை கள்வன்
இங்கே வருவானோ