பாப்பா பாட்டு

Paapa Paattu Lyrics in Tamil
Movie: Veetla Vishesham(வீட்ல விசேஷம்)
Music: Girishh Gopalakrishnan
Singer: Sid Sriram
Lyricist: Pa.Vijay (பா. விஜய்)

Paapa Paattu Lyrics in Tamil

ஆண்: வா வெண்ணிலாவே
வாடாத பூவே
என் வாழ்வில் மீண்டும்
எனை ஈன்ற தாயே

ஆண்: கண்ணோடு இமையாய்
சுகமான சுமையாய்
இரு கையில் ஏந்தி தாலாட்டுவேனே

ஆண்: காற்றோடு தலை கோதி
நதியோடு தவழ்ந்து
உயிரோடு உயிராக உறவாடும் அழகே

ஆண்: பனியோடு விளையாடி
மலர் ஊஞ்சலாடி
தரை வந்து தமிழ் பேசும்
இருகால் வெண்ணிலவே

ஆண்: சிறகாக உன்னை
நான் ஏந்தி செல்வேன்
சிணுங்காமல் உன்னை
நான் பார்த்து கொள்வேன்

ஆண்: ஒரு கோடி இன்பங்கள்
உனை பார்த்த நொடியில்
நான் வாழும் நாள் மட்டும்
நீ எந்தன் மடியில்

ஆண்: உனை ஈன்ற பொழுதிங்கு
கடவுள் தன் முகம் பார்த்த பொழுது
உன் பாதம் தொழுது

ஆண்: ஆராரிராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ஆராரிரோ
ஆராரிராரோ ஆராரிரோ

ஆண்: எல்லோர்க்கும் இங்கே
முகமூடி வாழ்க்கை
கண்ணே உன் முகம் போல
நிஜம் ஏது

ஆண்: உலகத்தின் ஓசை
ஓயாது கண்ணே
என் தோளில் தலை சாய்ந்து
நீ தூங்கு

ஆண்: இன்னும் இன்னும் நெடும்தூரம் சென்றால்
அன்பென்னும் ஊர் சேரலாம்
பொன்னும் பொருளும் தேடாத உறவை
அவ்வூரில் நீ காணலாம்

ஆண்: உன் பேரை சொன்னால்
எல்லோர்க்கும் தன்னால்
இதயத்தின் கதவொன்று அன்போடு திறக்கட்டும்
அழகே அமுதே என் உயிரே

ஆண்: ஆராரிராரோ ஆராரிராரோ
ஆராரிராரோ ஆராரிரோ
ஆராரிராரோ ஆராரிரோ
ஆராரிராரோ ஆராரிரோ