Nenje Nenje Lyrics in Tamil
பெண்: நெஞ்சே நெஞ்சே நீ எங்கே
நானும் அங்கே என் வாழ்வும் அங்கே
அன்பே அன்பே நான் இங்கே
தேகம் இங்கே என் ஜீவன் எங்கே
ஆண்: என் நதியே என் கண் முன்னே
வற்றிப்போனாய்
வான் மழையாக என்னை தேடி
மண்ணில் வந்தாய்
என் தாகங்கள் தீா்க்காமல்
கடலில் ஏன் சோ்கிறாய்
பெண்: ஓ நெஞ்சே நெஞ்சே நீ எங்கே
நானும் அங்கே என் வாழ்வும் அங்கே
ஆண்: கண்ணே என் கண்ணே
நான் உன்னைக் காணாமல்
வானும் இம்மண்ணும்
பொய்யாக கண்டேனே
பெண்: அன்பே பேரன்பே
நான் உன்னைச் சேராமல்
ஆவி என் ஆவி
நான் ஏற்றுப்போனேனே
ஆண்: வெயில் காலம் வந்தால்தான்
நீரும் தேனாகும்
பிரிவொன்றை கொண்டால்தான்
காதல் ருசியாகும்
பெண்: உன் பார்வை படும் தூரம்
என் வாழ்வின் உயிர் நீளும்
உன் மூச்சு படும் நேரம்
என் தேகம் அனலாகும்
ஆண்: நெஞ்சே நெஞ்சே நீ எங்கே
நானும் அங்கே என் வாழ்வும் அங்கே
அன்பே அன்பே நான் இங்கே
தேகம் இங்கே என் ஜீவன் எங்கே
பெண்: கள்வா ஹே கள்வா
நீ காதல் செய்யாமல்
கண்ணும் என் நெஞ்சும்
என் பேச்சை கேட்காதே
ஆண்: காதல் மெய் காதல்
அது பட்டு போகாத
காற்று நம் பூமி
தனை விட்டு போகாதே
பெண்: ஆகாயம் இடம் மாறி
போனால் போகட்டும்
ஆனால் நீ மனம் மாறி
போக கூடாதே
ஆண்: ஹே மஞ்சள் தாமரையே
என் உச்சத் தாரகையே
கடல் மண்ணாய் போனாலும்
நம் காதல் மாறாதே
பெண்: நெஞ்சே நெஞ்சே நீ எங்கே
நானும் அங்கே என் வாழ்வும் அங்கே
ஆண்: அன்பே அன்பே நான் இங்கே
தேகம் இங்கே என் ஜீவன் எங்கே
ஆண்: என் நதியே என் கண் முன்னே
வற்றிப்போனாய்
வான் மழையாக என்னை தேடி
மண்ணில் வந்தாய்
பெண்: உன் தாகங்கள் தீராமல்
மழையே ஏன் வைகிறாய்