Neelorpam Lyrics in Tamil
ஆண்: நீலோர்பம் நீரில் இல்லை
ஏன் தாண்டினாய் எல்லை
இனி ஏதும் தடங்கல் இல்லை
ஆண்: எப்போதும் நெஞ்சில் தொல்லை
தூக்கங்களும் இல்லை
இதை மீறி புகார்கள் இல்லை
ஆண்: நெருங்கி நீ நேரில் முத்தங்கள்
தாராத போதும்
எறிந்திடும் முத்தம் காற்றிலே
வந்தாக வேண்டும்
ஆண்: தடுக்கி நீ வீழ வேண்டும்
என்று கூட ஆசை உண்டு தான்
தடுத்து நான் தாங்கி கொண்டு
தூக்கி செல்ல வேண்டும் இன்று தான்
ஆண்: மாறா மனமிரண்டும்
ஒன்றாய் சேர்ந்ததென்ன
தீரா தவிப்புகளும்
தானாய் தீர்ந்ததென்ன
ஆண்: நீ இன்றி நான் இல்லை
பெண்: விரற்கடை அளவிலே இடைவெளியை
எதர்க்கடா தருகிறாய்
மனத்தடை நிலவு அதை உடைக்க
நெருக்கடி கொடுக்கிறாய்
பெண்: குளிருதே வெயில்
குமுறுதே குயில்
உதிருதே துயில் ஏனோ
பெண்: உடலிலே கனல்
உருகுதே நிழல்
குறைவதே இதழ் தானோ
ஆண்: நீண்ட நாள் பார்க்கவில்லை
உன்னை ஆவலாதி கேட்கவோ
நடந்ததை மெல்ல மெல்ல நீயும்
சொல்ல தோளில் சாய்க்கவோ
ஆண்: மாறா மனமிரண்டும்
ஒன்றாய் சேர்ந்ததென்ன
தீரா தவிப்புகளும்
தானாய் தீர்ந்ததென்ன
ஆண்: எதிலும் மாறா மனமிரண்டும்
ஒன்றாய் சேர்ந்ததென்ன
தீரா தவிப்புகளும்
தானாய் தீர்ந்ததென்ன
ஆண்: நீ இன்றி நான் இல்லை
ஆண்: நெருங்கி நீ நேரில் முத்தங்கள்
தாராத போதும்
எறிந்திடும் முத்தம் காற்றிலே
வந்தாக வேண்டும்
ஆண்: மாறா மனமிரண்டும்
ஒன்றாய் சேர்ந்ததென்ன
தீரா தவிப்புகளும்
தானாய் தீர்ந்ததென்ன
ஆண்: எதிலும் மாறா மனமிரண்டும்
ஒன்றாய் சேர்ந்ததென்ன
தீரா தவிப்புகளும்
தானாய் தீர்ந்ததென்ன
ஆண்: மாறா மனமிரண்டும்
ஒன்றாய் சேர்ந்ததென்ன
தீரா தவிப்புகளும்
தானாய் தீர்ந்ததென்ன
ஆண்: எதிலும் மாறா மனமிரண்டும்
ஒன்றாய் சேர்ந்ததென்ன
தீரா தவிப்புகளும்
தானாய் தீர்ந்ததென்ன
ஆண்: நீ இன்றி நான் இல்லை