நீ பார்க்கும் பார்வை

Movie: Byri
Music: Arun Raj
Singer: Kapil Kapilan

Nee Parkum Parvai Lyrics in Tamil – Mohan Rajan

ஆண்: நீ பார்க்கும் பார்வை போதாதே
போதாதே அன்பே
நீ போனால் நெஞ்சம் தாங்காதே
தாங்காதே அன்பே

ஆண்: என் வார்த்தை என்றும் மாறாதே
மாறாதே அன்பே
வெறுத்தாலும் காதல் தீராதே

ஆண்: உன் கை கோர்த்தால் போது கண்ணே
என் வாழ்க்கை மாறும்
நம் நரை காணும் காலம் கூட
காதல் செய்வேனே

ஆண்: அடி உன் தோளில் சாயும் நேரம்
என் ஆயுள் நீளூம்
ஒரு வார்த்தை மட்டும் சொல்லு
உனக்காய் உயிர் துறப்பேன் இங்கே

ஆண்: நீ பார்க்கும் பார்வை போதாதே
போதாதே அன்பே
நீ போனால் நெஞ்சம் தாங்காதே
தாங்காதே அன்பே

ஆண்: என் வார்த்தை என்றும் மாறாதே
மாறாதே அன்பே
வெறுத்தாலும் காதல் தீராதே

ஆண்: வெகுதூரம் போகாதே
விளையாட்டாய் நீங்காதே
மறுவார்த்தை பேசாமல் வருவேன் அன்பே

ஆண்: விழி ரெண்டும் மூடாதே
விருப்பங்கள் தேயாதே
அருகில் நீ இருந்தாலே போதும் அன்பே

ஆண்: அடி எதற்கு
இந்த அச்சம் பெண்ணே
என் உலகம் நீதான் கண்ணே
என் காதல் இன்னும் புரிய
என்ன செய்ய நான்

ஆண்: நீ பார்க்கும் பார்வை போதாதே
போதாதே அன்பே
நீ போனால் நெஞ்சம் தாங்காதே
தாங்காதே அன்பே

ஆண்: என் வார்த்தை என்றும் மாறாதே
மாறாதே அன்பே
வெறுத்தாலும் காதல் தீராதே

ஆண்: நொடி நேரம் விலகாமல்
நினைவெல்லாம் தொலைக்காமல்
என்னோடு இருப்பாயா
கண்ணின் முன்னே

ஆண்: உன் கோபம் தூண்டாமல்
என் நேசம் மாறாமல்
உன்னோடு வாழ்ந்தாலே
போதும் பெண்ணே

ஆண்: உன்னை மறப்பதென்பது
முடியாது அன்பே
உன் காதல் வேண்டும் கண்ணே
எனக்காக நீ பிறந்தாய் என்னோடு வா

ஆண்: நீ பார்க்கும் பார்வை போதாதே
போதாதே அன்பே
நீ போனால் நெஞ்சம் தாங்காதே
தாங்காதே அன்பே

ஆண்: என் வார்த்தை என்றும் மாறாதே
மாறாதே அன்பே
வெறுத்தாலும் காதல் தீராதே