Naan Pizhai Lyrics in Tamil – Vignesh Shivan
ஆண்: நான் பிழை நீ மழலை
எனக்குள் நீ இருந்தால் அது தவறே இல்லை
நீ இலை நான் பருவ மழை
சிறு சிறு துளியாய் விழும் தருணம் இல்லை
பெண்: ஆழியில் இருந்து அலசி எடுத்தேனே
அடைக்கலம் அமைக்க தகுந்தவன்தானே
ஆண்: அடி அழகா சிரிச்ச முகம்
நான் நினைச்சா தோணும் இடமே
அடி அழகா சிரிச்ச முகமே
நினைச்சா தோணும் இடமே
நான் பிறந்த தினமே
கெடச்ச வரமே
ஆண்: நான் பிழை நீ மழலை
எனக்குள் நீ இருந்தால் அது தவறே இல்லை
நீ இலை நான் பருவ மழை
சிறு சிறு துளியாய் விழும் தருணம் இல்லை
ஆண்: அவள் விழி மொழியை
படிக்கும் மாணவன் ஆனேன்
அவள் நடைமுறையை
ரசிக்கும் ரசிகணும் ஆனேன்
பெண்: அவன் அருகினிலே
கணல் மேல் பனித்துளி ஆனேன்
அவன் அணுகயிலே
நீர் தொடும் தாமரை ஆனேன்
ஆண்: அவளோடிருக்கும்
ஒரு வித சினேகிதன் ஆனேன்
அவளுக்கு பிடித்த
ஒருவகை சேவகன் ஆனேன்
பெண்: ஆழியில் இருந்து அலசி எடுத்தேனே
அடைக்கலம் அமைக்க தகுந்தவன்தானே
ஆண்: அடி அழகா சிரிச்ச முகம்
நான் நினைச்சா தோணும் இடமே
அடி அழகா சிரிச்ச முகமே
நினைச்சா தோணும் இடமே
நான் பிறந்த தினமே
கெடச்ச வரமே
ஆண்: நான் பிழை நீ மழலை
எனக்குள் நீ இருந்தால் அது தவறே இல்லை
நீ இலை நான் பருவ மழை
சிறு சிறு துளியாய் விழும் தருணம் இல்லை