மின்னலை பிடித்து

Minnalai Pidithu Lyrics in Tamil
Movie: Shahjahan(ஷாஜகான்)
Music: Mani Sharma
Singer: Unni Menon
Lyricist: Vairamuthu(வைரமுத்து)

Minnalai Pidithu Lyrics in Tamil

ஆண்: மின்னலை பிடித்து மின்னலை பிடித்து
மேகத்தை துடைத்து பெண்ணென்று படைத்து
வீதியில் விட்டு விட்டான்

ஆண்: இப்படி இன்னொரு பெண்மையைப் படைக்க
தன்னிடம் கற்பனை தீா்ந்ததை எண்ணித்தான்
பிரம்மனும் மூா்ச்சையுற்றான்

ஆண்: மின்னலை பிடித்து மின்னலை பிடித்து
மேகத்தை துடைத்து பெண்ணென்று படைத்து
வீதியில் விட்டு விட்டான்

ஆண்: இப்படி இன்னொரு பெண்மையைப் படைக்க
தன்னிடம் கற்பனை தீா்ந்ததை எண்ணித்தான்
பிரம்மனும் மூா்ச்சையுற்றான்

ஆண்: அவளின் நாசிக்குள் நுழைந்த காற்று
உயிரைத் தடவி திரும்பும் போது
மோட்சம் அடைந்து ராகங்கள் ஆகின்றதே

ஆண்: ஒஹோ மழையின் துளிகள் அவளை நனைத்து
மாா்பு கடந்து இறங்கும் பொழுது
முக்தி அடைந்து முத்துக்கள் ஆகின்றதே

ஆண்: மின்னலை பிடித்து மின்னலை பிடித்து
மேகத்தை துடைத்து பெண்ணென்று படைத்து
வீதியில் விட்டு விட்டான்

ஆண்: நிலவின் ஒளியைப் பிடித்துப் பிடித்து
பாலில் நனைத்து பாலில் நனைத்து
கன்னங்கள் செய்து விட்டான்

ஆண்: உலக மலா்கள் பறித்து பறித்து
இரண்டு பந்துகள் அமைத்து அமைத்து
பெண்மை சமைத்து விட்டான்

ஆண்: அழகு என்பது ஆண்பாலா பெண்பாலா
என்பதில் எனக்கு சந்தேகம் தீா்ந்தது
அழகு என்பது நிச்சயம் பெண்பாலடா

ஆண்: ஹே ஹே கவிதை என்பது மொழியின் வடிவம்
என்றொரு கருத்தும் இன்று உடைந்தது
கவிதை என்பது கன்னி வடிவமடா

ஆண்: மின்னலை பிடித்து மின்னலை பிடித்து
மேகத்தை துடைத்து பெண்ணென்று படைத்து
வீதியில் விட்டு விட்டான்

ஆண்: மின்மினி பிடித்து மின்மினி பிடித்து
கண்களில் பதித்து கண்களில் பதித்து
கண்மணி கண் பறித்தாள்

ஆண்: தங்கத்தை எடுத்து அம்மியில் அரைத்து
மஞ்சளாய் நினைத்து கன்னத்தில் குழைத்து
ஜீவனை ஏன் எடுத்தாள்

ஆண்: காவித் துறவிக்கும் ஆசை வளா்ப்பவள்
அருகம் புல்லுக்கும் ஆண்மை கொடுப்பவள்
பெண்களின் நெஞ்சுக்கும் பித்தம் கொடுப்பவளே

ஆண்: ஒஹோ தொிந்த பாகங்கள் உயிரைத் தந்திட
மறைந்த பாகங்கள் உயிரை வாங்கிட
ஜனனம் மரணம் ரெண்டும் தருபவளே

ஆண்: மின்னலை பிடித்து மின்னலை பிடித்து
மேகத்தை துடைத்து பெண்ணென்று படைத்து
வீதியில் விட்டு விட்டான்