Manmadhane Nee Lyrics in Tamil
பெண்: மன்மதனே நீ கலைஞன்தான்
மன்மதனே நீ கவிஞன்தான்
மன்மதனே நீ காதலன்தான்
மன்மதனே நீ காவலன்தான்
பெண்: என்னை உனக்குள்ளே தொலைத்தேன்
ஏனோ தெரியல
உன்னை கண்ட நொடி ஏனோ
இன்னும் நகரல
உந்தன் ரசிகை நானும் உனக்கேன் புரியவில்லை
பெண்: எத்தனை ஆண்கள் கடந்து வந்தேன்
எவனையும் பிடிக்கவில்லை
இருபது வருடம் உனைப்போல் எவனும்
என்னை மயக்கவில்லை
பெண்: எத்தனை ஆண்கள் கடந்து வந்தேன்
எவனையும் பிடிக்கவில்லை
இருபது வருடம் உனைப்போல் எவனும்
என்னை மயக்கவில்லை
பெண்: மன்மதனே நீ கலைஞன்தான்
மன்மதனே நீ கவிஞன்தான்
மன்மதனே நீ காதலன்தான்
மன்மதனே நீ காவலன்தான்
பெண்: நானும் ஓர் பெண் என
பிறந்த பலனை இன்றேதான் அடைந்தேன்
உன்னை நான் பார்த்த பின்
ஆண்கள் வர்கத்தை நானும் மதித்தேன்
பெண்: எந்தன் நெஞ்சில் ஊஞ்சல் கட்டி
ஆடிக் கொண்டே இருக்கிறாய்
எனக்குள் புகுந்து எங்கோ நீயும்
ஓடிக்கொண்டே இருக்கிறாய்
பெண்: அழகாய் நானும் மாறுகிறேன்
அறிவாய் நானும் பேசுகிறேன்
சுகமாய் நானும் மலருகிறேன்
உனக்கேதும் தெரிகிறதா
பெண்: ஒருமுறை பார்த்தால் பலமுறை இனிக்கிற
என்ன விசித்திரமோ
நண்பனே எனக்கு காதலன் ஆனால்
அது தான் சரித்திரமோ
பெண்: ஒருமுறை பார்த்தால் பலமுறை இனிக்கிற
என்ன விசித்திரமோ
நண்பனே எனக்கு காதலன் ஆனால்
அது தான் சரித்திரமோ
பெண்: மன்மதனே உன்னை பார்க்கிறேன்
மன்மதனே உன்னை ரசிக்கிறேன்
மன்மதனே உன்னை ருசிக்கிறேன்
மன்மதனே உன்னில் வசிக்கிறேன்
பெண்: உன்னை முழுதாக நானும்
மென்று முழுங்கவோ
உந்தன் முன்னாடி மட்டும்
வெட்கம் மறக்கவோ
எந்தன் படுக்கை அறைக்கு உந்தன்
பேரை வைக்கவோ
பெண்: அடிமை சாசனம் எழுதி தருகிறேன்
என்னை ஏற்று கொள்ள
ஆயுள் வரையில் உன்னுடன் இருப்பேன்
அன்பாய் பார்த்துக்கொள்ள
பெண்: அடிமை சாசனம் எழுதி தருகிறேன்
என்னை ஏற்று கொள்ள
ஆயுள் வரையில் உன்னுடன் இருப்பேன்
அன்பாய் பார்த்துக்கொள்ள