மதுர மரிக்கொழுந்து

Madura Marikkozhunthu Vaasam Lyrics in Tamil
Movie: Enga Ooru Pattukaran(எங்க ஊரு பாட்டுக்காரன்)
Music: Ilaiyaraaja
Singers: Mano and K. S. Chithra
Lyricist: Gangai Amaran(கங்கை அமரன்)

Madura Marikkozhunthu Vaasam Lyrics in Tamil

குழு: பச்சரிசி மாவிடிச்சு
மாவிடிச்சு மாவிடிச்சு
சர்க்கரையில் பாகு வச்சு
பாகு வச்சு பாகு வச்சு

குழு: சுக்கிடுச்சு மிளகிடுச்சு
மிளகிடுச்சு மிளகிடுச்சு
பக்குவமா கலந்து வச்சு
கலந்து வெச்சு கலந்து வெச்சு

குழு: அம்மனுக்கு மாவிளக்கு
எடுத்து வந்தோம் எடுத்து வந்தோம்
அம்மனவ எங்களையும் காக்க வேணும்
காக்க வேணும் தாயி

ஆண்: மதுர மரிக்கொழுந்து வாசம்
என் ராசாத்தி உன்னுடைய நேசம்
மதுர மரிக்கொழுந்து வாசம்
என் ராசாத்தி உன்னுடைய நேசம்

ஆண்: மானோட பார்வை மீனோட சேரும்
மானோட பார்வை மீனோட சேரும்
மாறாம என்னைத் தொட்டுப் பேசும்
இது மறையாத என்னுடைய பாசம்

ஆண்: மதுர மரிக்கொழுந்து வாசம்
என் ராசாத்தி உன்னுடைய நேசம்

ஆண்: பொட்டுன்னா பொட்டு வச்சு
வெட்டு வெட்டுன்னு வெட்டிப்புட்டு
பட்டுனு சேலையைக் கட்டி
எட்டு வச்சு நடந்துகிட்டு

ஆண்: பொட்டுன்னா பொட்டு வச்சு
வெட்டு வெட்டுன்னு வெட்டிப்புட்டு
பட்டுனு சேலையைக் கட்டி
எட்டு வச்சு நடந்துகிட்டு

ஆண்: கட்டுன்னா கட்டிப்புட்ட
நெஞ்சக் கொஞ்சம் தட்டிப்புட்ட
வெட்டும் இரு கண்ணை வச்சு
என்னைக் கட்டிப் போட்டுப்புட்ட

பெண்: கட்டு அது உனக்கு மட்டும்தானா
இந்த சிட்டும் கூட சிக்கியது ஏனா
எப்போதோ விட்டக்குறை மாமா
அது இரு உசுர கட்டுதய்யா தானா

பெண்: இது இப்போது வாட்டுதுன்னு
பாட்டு ஒன்ன அவுத்துவிடு

பெண்: மதுர
ஆண்: மரிக்கொழுந்து வாசம்
பெண்: என் ராசாவே உன்னுடைய நேசம்
ஆண்: அடி மதுர மரிக்கொழுந்து வாசம்
பெண்: என் ராசாவே உன்னுடைய நேசம்

பெண்: மெட்டுன்னா மெட்டு கட்டி
இட்டு கட்டி பாடிக்கிட்டு
கட்டுனா ராகம் என்னும்
மாலை ஒன்னை கட்டிப்புட்டு

பெண்: மெட்டுன்னா மெட்டு கட்டி
இட்டு கட்டி பாடிக்கிட்டு
கட்டுனா ராகம் என்னும்
மாலை ஒன்னை கட்டிப்புட்டு

பெண்: சுத்துனா சுத்தி அத
என் கழுத்தில் போட்டுப்புட்ட
ஒன்ன மட்டும் விட்டுப்புட்ட
தாலி கட்ட மறந்துப்புட்ட

ஆண்: நீதானே என்னுடைய ராகம்
என் நெஞ்செல்லாம் உன்னுடைய தாளம்
ஏழேழு ஜென்மம் உன்னைப் பாடும்
உன்னோட பாட்டுக்காரன் பாட்டும்

ஆண்: என் மனசேனோ கிறங்குதடி
சிறகடிச்சுப் பறக்குதடி

ஆண்: மதுர
பெண்: மரிக்கொழுந்து வாசம்
ஆண்: என் ராசாத்தி உன்னுடைய நேசம்

பெண்: மானோட பார்வை மீனோட சேரும்
ஆண்: மானோட பார்வை மீனோட சேரும்
பெண்: மாறாம என்னைத் தொட்டுப் பேசும்
ஆண்: இது மறையாத என்னுடைய பாசம்

பெண்: மதுர மரிக்கொழுந்து வாசம்
ஆண்: என் ராசாத்தி உன்னுடைய நேசம்
ஆண்: மதுர மரிக்கொழுந்து வாசம்
பெண்: என் ராசாவே உன்னுடைய நேசம்

Other Songs From Enga Ooru Pattukaran